திண்டிவனம் டூ கடலூர் புதிய ரயில் பாதை.. புதுச்சேரி, திருவண்ணாமலைக்கு செம்ம.. மத்திய அரசு விளக்கம்
விழுப்புரம்: திண்டிவனத்திலிருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை, புதுச்சேரி வழியாக சுமார் 77 கி.மீ. நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டள்ளது. இந்த திட்டம், சென்னை மற்றும் புதுச்சேரியை இணைத்து, கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்படுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது. இந்த புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடலூர், புதுச்சேரி மாவட்ட மக்களுக்கு திண்டிவனம் வழியாக புதிய ரயில் பாதை அமைத்து, அப்படியே திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வரியாக எளிதாக திருவண்ணாலை வரை ரயில் பாதை அமைத்தால், வேலூர் காட்பாடி வழியாக இரு வழித்தடங்களிலும் மக்கள் எளிதாக பயணிக்க முடியும். பெங்களூருக்கு புதுச்சேரியில் இருந்து ரயில்களை இயக்க முடியும்.

திருவண்ணாமலை
வட மாவட்டங்கள் முழுமையாக இந்ததிட்டத்தால் பயன்பெறும். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட மக்களுக்கு இந்த திடடம் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்தும், தாம்பரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு நேரடி தொடர்பு ஏற்படும். காஞ்சிபுரம் எப்படி நேரடி தொடர்பில் சென்னையுடன் இருக்கிறதோ அதுபோல் திருவண்ணாமலையும் மாறும். பொருளாதார மாற்றமும் வடமாவட்டங்களில் அதிகமாகும்.
மத்திய அமைச்சர் விளக்கம்
திண்டிவனத்திலிருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை, புதுச்சேரி வழியாக சுமார் 77 கி.மீ. நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைப்பது து தொடர்பாக, லோக்சபா கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துப் பேசினார்.
திண்டிவனம் - கடலூர் புதிய ரயில் பாதை
அவர் பேசுகையில், "திண்டிவனம் - கடலூர் இடையே புதுச்சேரி வழியாக (77 கிமீ) புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைவான போக்குவரத்து மதிப்பீடுகள் காரணமாக இத்திட்டம் இன்னமும் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. எனினும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு திண்டிவனம் - சேதாரப்பேட்டை (புதிய புதுச்சேரி) இடையேயான புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கைகளை தயார் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.
விரிவான திட்ட அறிக்கை
இந்த விரிவான செயல்திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன், மாநில அரசுகள் மற்றும் நிதியமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.இந்த திட்டம் ஆய்வுக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டால் நிதி ஒதுக்கீட்டை பொறுத்தும், நிலம் கையகப்படுத்துதலை பொறுத்தும் பயன்பாட்டிற்கு வரும். நீண்ட காலம் ஆகும் என்றாலும், அரசு அனுமதி தந்தால் குறிப்பிட்ட ஆண்டுகளில் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications