விழுப்புரத்தில் இருந்தபடியே போன் போட்ட ஸ்டாலின்.. உடனே தருமபுரிக்கு கிளம்பிய உதயநிதி!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிக கனமழை பெய்து வரும் தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வர் உதயநிதியை உடனே போகச் சொல்லியுள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் துவங்கி, அன்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்திலே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவில் மழை பதிவானது.

விழுப்புரம் மாவட்டம் முழுக்க மயிலம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 49.29 செ.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்குச் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது, "புயல், மழை பாதிப்புகளை கணக்கிட்டு ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை. நிச்சயமாக அனுப்புவோம். நிதி தருவது அவர்களின் கடமை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள். நம்பிக்கையோடுதான் அனுப்புகிறோம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் அதையும் சமாளிப்போம்.
ஃபெஞ்சல் புயலால் சுமார் 3.18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. மழை நின்ற பிறகு பயிர் சேதங்களை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, விரைவில் மத்திய குழுவை அனுப்பி வைக்க கோரிக்கை வைப்போம்"" எனத் தெரிவித்தார்.

மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக தகவல் வந்ததுமே, உடனே துணை முதல்வர் உதயநிதிக்கு போன் செய்து, உடனே அவரை அங்கு போகச் சொல்லி இருக்கிறேன். மேலும், கனமழை பெய்யும் பகுதிகளில் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்களை பணியாற்ற உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின் அறுவுறுத்தலைத் தொடர்ந்து, உடனடியாக, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு புறப்பட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். சென்னையில் இருந்து விமானம் வாயிலாக சேலத்துக்கு புறப்பட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி. அங்கிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளார்.
முன்னதாக, வரலாறு காணாத கனமழையை அடுத்து நிவாரண பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, ஆர்.ராஜேந்திரன் ஆகியோரை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications