ரயிலில் ஏறும்போது விழுந்து சிக்கிக்கொண்ட 4 பேர்.. உடனே சங்கிலியை இழுத்த பயணிகள்.. பரபர திண்டிவனம்!
விழுப்புரம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் ரயிலில் ஏற முயன்றபோது கால் இடறி தண்டவாளத்தில் விழுந்த 4 பேர், ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவத்தால் திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பயணிகள் அபாய சங்கிலியை இழுத்ததால் ரயில் நின்றது. இதன் மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் திருச்செந்தூர் செல்வதற்காக, திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் ரயிலில் ஏற முயன்றபோது, திடீரென ரயிலை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில், கைக்குழந்தை உட்பட 3 பேர் ரயிலுக்கு அடியில் விழுந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில் 7 மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயில் ஏற முயன்றுள்ளனர். அப்போது கால் இடறி, தண்டவாளத்தின் இடையே சிக்கிக் கொண்டனர். முன் அறிவிப்பின்றி திடீரென ரயிலை எடுத்ததால் அதில் ஏற முயன்றபோது, குழந்தையுடன் 4 பேர் தண்டவாளத்தில் தவறி விழுந்து பெட்டிகளுக்கு கீழ் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ஏழு மாத குழந்தை உள்ளிட்ட 4 பேரையும் மீட்டுள்ளனர். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்களை ரயில்வே போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
முன்னறிவிப்பு இன்றி ரயிலை இயக்கத் தொடங்கியதாக ஆத்திரமடைந்த பயணிகள், ரயிலை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீசார் தலையிட்டு, பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications