விடிவதற்குள் அடுத்தடுத்த கேஸ்கள்.. ஒரே இரவில் 25 பேருக்கு கொரோனா.. விழுப்புரத்தில் மோசமாகும் நிலை!
விழுப்புரம்: நேற்று இரவில் இருந்து இன்று காலைக்குள் விழுப்புரத்தில் அடுத்தடுத்து 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலரின் கொரோனா டெஸ்ட் முடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா கேஸ்கள் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. முக்கியமாக கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து தினமும் 100+ கேஸ்கள் தமிழகத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மொத்தமாக 3550 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் எப்படி
நேற்று முதல் நாள் விழுப்புரத்தில் 86 பேருக்கு கொரோனா இருந்தது. இந்த நிலையில் நேற்று 49 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று கொரோனா ஏற்பட்ட எல்லோரும் விழுப்புரத்தில் கோயம்பேடு சென்றுவிட்டு திரும்பியவர்கள். இவர்கள் எல்லோர்க்கும் கோயம்பேடு மார்க்கெட் சோர்ஸ் மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை மொத்தமாக 3922 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமும் அதிகரிக்கிறது
இந்த நிலையில் தற்போது விழுப்புரத்தில் சரசரவென்று கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றை போலவே இன்றும் விழுப்புரத்தில் கொரோனா கேஸ்கள் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. விழுப்புரத்தில் கொரோனாவிற்கு மொத்தம் 2 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 29 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய கணக்குப்படி அங்கு 121 சிகிச்சை பெற்று வந்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்கள் காரணமாக விழுப்புரத்தில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக அங்கு கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அதாவது லாரி டிரைவர் தொடங்கி காய்கறி வியாபாரிகள் மூலம் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இவர்களை தொடர்பு கொண்ட இவர்களின் உறவினர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எல்லோரையும் தேடுகிறார்கள்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 820 பேர் கோயம்பேட்டில் இருந்து விழுப்புரத்திற்கு வந்துள்ளனர். இதில் இதுவரை 450 பேர் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எங்கே சென்றனர் என்று தேடப்பட்டு வருகிறது. அவர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்று தேடப்பட்டு வருகிறது. நேற்று கணக்குப்படி விழுப்புரத்தில் கோயம்பேடு மார்க்கெட் சென்ற 85 பேருக்கு ஏற்கனவே கொரோனா ஏற்பட்டுள்ளது.

இன்று காலை வந்த கேஸ்கள்
இந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் நேற்று இரவில் இருந்து இன்று காலைக்குள் மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் மொத்தம் 160 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக இதுவரை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் 110 பேருக்கு விழுப்புரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மேலும் சோதனைகள் செய்யப்படும்.

இன்று மேலும் கூடும்
இதனால் மாலைக்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள். இதனால் விழுப்புரத்தில் மொத்தம் 27க்கும் மேற்பட்ட கிராமங்களை மொத்தமாக லாக் செய்துள்ளனர். மக்கள் உள்ளேயும், வெளியேயும் செல்லாதபடி மொத்தமாக லாக் செய்துள்ளனர். அங்கு கோயம்பேடு சென்ற எல்லோரையும் தேடி கண்டுபிடித்து சோதனை செய்ய உள்ளனர். விழுப்புரத்தில் வரும் நாட்களில் கொரோனா சோதனைகள் அதிகரிக்கும் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications