மதுரையில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பிரசவத்தின் போது மரணம் - விழுப்புரத்தில் நால்வர் பலி
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் நோய் தொற்று தினசரியும் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் மரணமடைந்துள்ளனர். மதுரையில் இன்று 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
விழுப்புரம்: கொரோனோ நோய் தொற்றுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து விழுப்புரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளது மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். இதேபோல வானூர் அடுத்த தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார். இதே போல அரியலூர் திருக்கை சேர்ந்த அண்மையில் உயிரிழந்த இளைஞரின் தாயார், கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இன்று கொரோனா பாதிப்பில் உயிரிழந்தனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தெரிகிறது. மாவட்டத்தில் இதுவரை 551 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது
மதுரையில் 2 பேர் மரணம்
மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 45வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் பேறுகாலத்தின் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளையும் ஆரோக்கியத்துடன் மருத்துவர்கள் மீட்டனர். மதுரையில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளது மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications