• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செதில் செதிலாக "உரிந்த" தோல்.. கதறிய மனைவி.. கூலாக "டீல்" செய்த கணவர்.. நடுங்கும் "மரண வாக்குமூலம்"

மனைவியை தீ வைத்து கொளுத்தி எரித்த கணவனிடம் விசாரணை நடக்கிறது
Google Oneindia Tamil News

விழுப்புரம்: ஒரு இளம்பெண் மரண வாக்குமூலம் தந்துள்ளார்.. அதில் தன் மரணத்துக்கு யார் காரணம் என்பதை விலாவரியாக எடுத்து சொல்லி உள்ள நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைக்க வைத்து வருகிறது.

பெண்கள் இன்று அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறார்கள்.. தங்கள் சொந்த காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்.. கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில், முன்பைவிட பெண்களின் நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது... மறுப்பதற்கில்லை..

ஆனாலும், காலம் மாறினாலும், வரதட்சணைக் கொடுமை மட்டும் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கல்வி அறிவில் மிகைபெற்ற மாநிலமான கேரளாவில்கூட, இந்த வரதட்சணை கொடுமை தாண்டவமாடியதையும், அதனால், அடுத்தடுத்த 3 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு, இந்த நாடே அதிர்ந்தது..

 கோகுல்ராஜ் கொலை.. சிசிடிவியில் உள்ளது நான் இல்லை..வாக்குமூலம் அளித்த சுவாதி..அடுத்து நடந்த ட்விஸ்ட் கோகுல்ராஜ் கொலை.. சிசிடிவியில் உள்ளது நான் இல்லை..வாக்குமூலம் அளித்த சுவாதி..அடுத்து நடந்த ட்விஸ்ட்

 கெட்ட பெயர்

கெட்ட பெயர்

3 பெண்களுமே 22 முதல் 24 வயதுடையவர்கள்.. 3 பேருமே கல்லூரி படிப்பை படித்து கொண்டிருந்தவர்கள்.. 3 பேருக்குமே ஒரே மாதிரியான வரதட்சணை கொடுமை தரப்பட்டுள்ளது.. 3 பேருமே மர்மமான முறையிலும் இறந்துவிட்டனர்.. இது தற்கொலையா, கொலையா? என்ற வழக்கு நடக்கிறது என்றாலும், கேரளாவிலா இப்படியெல்லாம் நடந்தது என்று பினராயின் அரசுக்கே கெட்ட பெயர் வரும் அளவுக்கு இந்த வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துவிட்டன. நம்ம ஊரும் இதற்கெல்லாம் விதிவிலக்கு இல்லை.. வரதட்சணையின் அளவுகளும், வடிவங்களும் மாறி உள்ளதே தவிர, வரதட்சணையின் தீவிரம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது..

கண்டமங்கலம்

கண்டமங்கலம்

ஒருசில பெண்கள் துணிச்சலாக இதை எதிர்கொள்கிறார்கள் என்றாலும், பல அபலை பெண்களின் துயர முடிவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.. அந்தவகையில்தான், அருப்புக்கோட்டையில் ஒரு பரிதாப பெண் தன் உயிரையே விட்டுள்ளார்.. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு டிரைவர்.. இவரது மனைவி பெயர் சங்கீதா.. 24 வயதான இவர், ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர்.. இருவருமே காதலித்துதான் திருமணம் செய்து கொண்டனர்..

 லவ் மேரேஜ்

லவ் மேரேஜ்

முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், அதனை சங்கீதா தட்டிக் கேட்டுள்ளார்.. இதுவே கணவன் மனைவிக்கு இடையே தகராறு வர முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.. கடந்த 4ம் தேதியும் இப்படித்தான் தம்பதிக்குள் சண்டை வெடித்திருக்கிறது. இந்நிலையில், வீட்டில் இருந்த சங்கீதா உடலில் தீப்பற்றி, படுகாயம் அடைந்தார்... உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சங்கீதாவை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..

 மரண வாக்குமூலம்

மரண வாக்குமூலம்

ஆனால், சங்கீதா இறப்பதற்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் மரண வாக்குமூலம் ஒன்றையும் தந்துள்ளார்.. அந்த வீடியோவில், பலவிஷயங்களை இன்னலுடன் பகிர்ந்துள்ளார் சங்கீதா. அதில், "வரதட்சணை கேட்டு கணவர் என்னை அடிக்கடி அடிப்பார்.. நிறைய டார்ச்சர் செய்தார்... குடித்துவிட்டு வந்து என்னை அடிப்பார்.. வலி பொறுக்க முடியாமல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பேன் என்று சொன்னேன்.. ஆனால், என் மீது மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி விட்டு, என் கணவரே கொளுத்திவிட்டார்..

 உரிந்த தோல்

உரிந்த தோல்

பிறகு என்னை தண்ணீரில் தூக்கி வீசினார்.. என் உடம்பில் உள்ள தோல் எரிந்து உரிந்து கதறினேன்... அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து என்னை மீட்டனர்... ஆம்புலன்ஸ் வந்தது.. ஆம்புலன்ஸில் என்னை ஏற்றினார்கள்.. ஆனால், அப்போதுகூட, அவர் என்னுடன் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.. அங்கிருந்தவர்கள் எல்லாரும் திட்டினார்கள்.. அதற்கு பிறகுதான் என்னுடன் வந்தார்.. வரும்போதெல்லாம் என்னை மிரட்டிட்டே வந்தார்..

 தோல் உரிந்தது

தோல் உரிந்தது

நீ உண்மையை சொன்னால், உன்னை கொளுத்திய மாதிரியே உன் பிள்ளைகளையும் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் நான் யாரிடமும் உண்மையை சொல்லவில்லை... நீதிபதி, போலீசார், டாக்டர், எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் என்ன நடந்தது என்று கேட்டார்கள்.. நான் எல்லாரிடமும் பொய் தான் சொன்னேன்... ஆனால், இது தான் நடந்த உண்மை" என்று சங்கீதா கூறியுள்ளார். இதனிடையே, சங்கீதாவின் அப்பா சக்திவேல், தந்த புகாரின்படி, கண்டமங்கலம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

டார்ச்சர்

டார்ச்சர்

ஆரம்பத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்ததால்தான், தம்பதிக்குள் தகராறு நடந்துள்ளது.. ஆனால், தன் மீதான தவறை மறைக்க, முத்துக்குமார், வரதட்சணை விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.. அவருடன் முத்துக்குமாரின் அக்கா கலையரசியும் சேர்ந்து, சங்கீதாவிடம் வரதட்சணை அதிகம் வாங்கி வரும்படி தொந்தரவு செய்து வந்துள்ளனர்.. இதற்கு சங்கீதா மறுத்துள்ளார்.. கடந்த 5ம் தேதியும் இந்த சண்டைதான் நடந்துள்ளது.. அப்போது சங்கீதாவுக்கு பின்பக்கமாக வந்து, திடீரென மண்ணெண்ணெய்யை 2 பேரும் சேர்ந்து ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர்..

மூக்கில் டியூப்

மூக்கில் டியூப்

நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் பிள்ளைகளை கொளுத்திவிடுவதாக மிரட்டவும்தான், யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.. நீதிபதி மருத்துவமனைக்கே வந்து சங்கீதாவிடம் கேட்டபோதும் பொய்தான் சொன்னார்.. தானே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொன்னார்.. ஆனால், சங்கீதா சொல்வது பொய் என்று சங்கீதாவின் குடும்பத்தினருக்கு தெரியும் என்பதால், சங்கீதாவின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளனர்.. உண்மையை நீதிபதியிடம் சொல்லுமாறு மன்றாடி உள்ளனர்.. அதற்கு பிறகுதான் சங்கீதா உண்மையை சொல்லி உள்ளார்.. உடம்பெல்லாம் வெந்துபோய், மூக்கில் டியூப்புடன், மூச்சு திணறிக் கொண்டே சங்கீதா சொல்லும் மரண வார்த்தைகள் ஒவ்வொன்றும், மனித இதயங்களை சுட்டெரித்து வருகிறது.

English summary
Did the husband set his wife on fire and Shocking incident in Vizhupuram Kandamangalam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X