"விட்ருடா செல்லம்".. படக்குனு மண்ணுக்குள்ளேயிருந்து வெளியே வந்த "கை".. அலறி ஓடிய மக்கள்.. என்னாச்சு
விழுப்புரம்: 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்களாம்.. அப்போது திடீரென அந்த உருவம் தென்பட்டுள்ளது.. இதைப்பார்த்து அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சாலவனூர் என்ற கிராமம்.. இங்கு 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.. அப்போது, சுடுகாட்டின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் திடீரென ஒரு இளம்பெண்ணின் உடல் வெளியே வந்தது.. இதைப்பார்த்து பதறிப்போன பணியாளர்கள், உடனடியாக கஞ்சனூர் செஞ்சி போலீசுக்கு தகவல் தந்தார்கள்..

17 வயது சிறுமி: கஞ்சனூர் போலீசாரும் விரைந்து வந்து, அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையையும் துவங்கினர்.. அப்போதுதான் அந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.. உயிரிழந்த பெண்ணின் பெயர் பிரியதர்ஷினி.. 17 வயதுதான் ஆகிறது..
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியைச் சேர்ந்தவராம்.. பிரியதர்ஷினி அகிலன் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அகிலனுக்கு 23 வயதாகிறது.. விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இந்த அகிலன்.. இவர்தான் பிரியதர்ஷினியை கொன்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.. போலீசார் இந்த விசாரணையை நடத்தி கொண்டிருக்கும்போதே, அகிலன் தலைமறைவாகிவிட்டார்...
வாக்குமூலம்: இதற்கு பிறகு அவரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அகிலனை கைது செய்தனர். பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசித்து வருகிறாராம் அகிலன்.. அகிலனிடம் விசாரணை நடத்தியபோது, போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்..
யார் அந்த அகிலன்: அதாவது, அகிலனின் சொந்தக்காரர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் இருக்கிறதாம்.. அதே போல பிரியதர்ஷினியின் சொந்தக்காரர் வீடும் கப்பூரில் இருக்கிறதாம்.. அவரவர் சொந்தக்காரர் வீட்டிற்கு வந்தபோது பிரிதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.. இதற்கு பிறகு, அகிலன் அடிக்கடி கண்டமானடி கிராமத்திற்கு வந்து செல்வாராம்.. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பிரிதர்ஷினியுடன் உல்லாசமாகவும் இருந்துவிட்டு போவாராம்..
இந்த விஷயம் பிரியதர்ஷினியின் பெற்றோர் காதில் விழுந்துள்ளது.. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். எனினும், அவர் தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்திருக்கிறார்.. இந்த சூழலில், 3 மாத கர்ப்பிணியாகியிருக்கிறார் பிரியதர்ஷிணி.. இதனால் பயந்துபோன பிரியதர்ஷினி, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் கேட்டுள்ளார்..
அதற்கு அகிலன், "சரி, சித்தேரிப்பட்டுக்கு வா, கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று சொல்லி பிரியதர்ஷினியை அழைத்து வந்து, சுடுகாட்டு பக்கத்திலேயே வைத்து கொன்றிருக்கிறார்.. சடலத்தையும் அங்கேயே மண்ணை போட்டு மூடிவைத்து விட்டு கிளம்பி உள்ளார்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அகிலன் இப்போது கைதாகி உள்ளார்.
வாய்க்கால்: அதாவது, வாய்க்காலை ஆழப்படுத்துவதற்காக, 100 நாள் பணியாளர்கள் அந்த பகுதியில் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள்.. அப்போதுதான், மண்ணிலிருந்து கை பகுதி வெளியே வந்துள்ளது... போலீசார் வந்து சடலத்தை பார்த்தபோதுகூட அடையாளம் தெரியவில்லை.. இளம்பெண் மாயமானதாகி உள்ள நிலையில், விழுப்புரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார்கள் எதுவும் பெறாமல் இருந்திருக்கிறார்கள்.
அதற்கு பிறகுதான், பிரியதர்ஷினியின் தங்கை, கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தன்னுடைய அக்கா போலவே இருக்கிறது என்றும், அவர் அணிந்திருக்ககூடிய நகை, டிரஸ் எல்லாமே தன்னுடைய அக்கா அணிந்திருந்தது போலவே இருக்கிறது என்றார்.
சடலம்: இறுதியில், சடலத்தை போலீசார் காட்டவும், அது தன்னுடைய அக்காதான் என உறுதிபடுத்தியுள்ளார்.. திருமணம் செய்து கொள்வதாக அழைத்து சென்ற அகிலன், பிரியதர்ஷினியின் கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெறித்து கொலை செய்தாராம்.. 2 நண்பர்கள் இதற்கு உதவியதாகவும், அவர்கள் உதவியுடன் வாய்க்காலில் புதைத்து விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications