விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் | Nanguneri By Election

    சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு கொடுத்துள்ளார் திமுக எம்பி கவுதம சிகாமணி. ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக திமுக களமிறக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவேறு கருத்துகள் திமுகவில் வலம் வருகின்றன.

    திமுக இளைஞரணி செயலாளராகிவிட்ட உதயநிதியை எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்கள் விருப்பம். அதனால் முதலில் நாங்குநேரியில் உதயநிதியை களமிறக்குவோம் என்றனர்.

    பின்னர் விக்கிரவாண்டி தொகுதி காலியான நிலையில் அங்கும் உதயநிதியை போட்டியிட வைப்போம் என்றனர் ஆதரவாளர்கள். அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    அதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனைஅதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை

    அக்.21-ல் தேர்தல்

    அக்.21-ல் தேர்தல்

    இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவதற்காக கட்சி நிர்வாகிகளிடம் இருந்து திமுக விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது.

    உதயநிதிக்கு நன்றி கடன்

    உதயநிதிக்கு நன்றி கடன்

    இந்நிலையில் திமுக எம்.பி.யான கவுதசிகாமணி, உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டியில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, கவுதமசிகாமணி இப்படி மனு கொடுப்பார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் அவர் எம்.பி.யானதற்கு காரணமே உதயநிதிதான்.

    சிவிஎஸ் அண்ணன் போட்டி?

    சிவிஎஸ் அண்ணன் போட்டி?

    ஆனால் கட்சி தலைமை அவ்வளவு சீக்கிரமாக உதயநிதியை களமிறக்கிவிட்டாது என்றே கருதுகிறோம். ஏனெனில் அதிமுகவில் அமைச்சர் சிவி சண்முகம் தமது சகோதரரை வேட்பாளராக நிறுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். லோக்சபா தேர்தலின் போதும் சகோதரருக்கு சீட் வாங்க சிவி சண்முகம் முயற்சித்தார். ஆனால் கை கொடுக்காமல் போனது. இப்போது எப்படியாவது சீட் வாங்கி வெற்றி பெற வைப்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார்.

    முடிவுகள் மாறலாம்

    முடிவுகள் மாறலாம்

    இப்படி களநிலவரம் இருக்கிறது.. அதனால் உதயநிதி போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைவு. அதேநேரத்தில் அதிமுகவில் பரிச்சயம் இல்லாத வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டால் திமுக தலைமை உதயநிதியை களமிறக்கவும் சாத்தியம் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை என்கின்றனர்.

    English summary
    DMK sources said that, Some senior leaders wanted party to field Udhayanidhi Stalin as a Candidate for Vikravandi By-Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X