காப்பு காட்டில் பிணம்.. கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சிறுவன்.. விவகாரமே வேறு.. அதிர வைக்கும் பின்னணி!
Recommended Video
உளுந்தூர்பேட்டை: ஆணுறைகள் சிதறி கிடக்கவும், பாலியல் விவகாரமாகத்தான் சிறுவனை கழுத்து அறுத்து கொலை செய்திருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் விஷயமே வேற!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் அயன் குஞ்சரம். இங்கு வசித்து வருபவர் கேசவன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி. கூலிவேலை செய்து வருகிறார்.
இவர்களது மூத்த மகன் சரத்குமார். வயசு 21 ஆகிறது. கரும்பு வெட்டும் தொழில் செய்கிறார். 2-வது மகன் சிவக்குமார். வயசு 15. அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

கொலை
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்புக்காட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான் சிவக்குமார். யார் கொலை செய்தார்கள் என்றே தெரியவில்லை, கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.

ஆணுறைகள்
அவனுடைய சடலத்துக்கு கொஞ்ச தூரத்தில் ஆணுறைகள் சிதறி கிடந்தன. அதனால் பாலியல் தொழில் செய்பவர் எவரேனையும் சிவக்குமார் கண்ணால் பார்த்துவிட்டு இருக்கலாம் என்றும் வெளியில் சொல்லிவிடக்கூடாது என்பதாலேயே அவனை கொன்றிருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டது. ஆனால் இப்போது விஷயமே வேறாம். சிவக்குமாரின் கூட பிறந்த அண்ணன் சரத்குமார்தான் தம்பியை கொன்றது என்று தெரியவந்துள்ளது.

பாட்டி பாலாயி
இதற்கு முக்கிய காரணம் மோப்ப நாய் ராக்கிதான். நேராக ஓடிப்போய் சிவக்குமார் வீட்டில் நின்றுவிட்டது. அதன்பிறகுதான் சிவக்குமாரின் அம்மா பராசக்தி, அண்ணன் சரத்குமார், பாட்டி பாலாயி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. வீட்டிற்குள்ளேயே ஒரு கத்தியும் கிடைத்தது. பிறகு போலீசார் ரகசியமாக இவர்கள் எல்லாரையும் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

முயல்வேட்டை
அப்போது சரத்குமார் மீது சந்தேகம் ஜாஸ்தியானது. அதனால் ஸ்டேஷனுக்கு அழைத்து தங்கள் பாணி விசாரணையை ஆரம்பித்தனர். பிறகு போலீசாரிடம் சரத்குமார் சொல்லும்போது,"எனக்கும் என் தம்பிக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை வரும். சம்பவத்தன்றும் அப்படித்தான் சண்டை வந்தது. அதனால அவனை கொல்ல முடிவு பண்ணேன். சிவக்குமாருக்கு முயல் வேட்டைன்னா ரொம்ப பிடிக்கும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்கூல் லீவு என்பதால், வேட்டைக்கு போய்டுவான். இதைதான் நான் சாக்கா பயன்படுத்திக்கிட்டேன்.

பட்டாக்கத்தி
நானே அவனை முயல்வேட்டைக்கு போலாம்னு கூட்டிட்டு போனேன். புதர் மண்டி கிடக்கும் பாறை இடுக்கு இடையே சிவக்குமாரை முயலை பிடிக்க கண்ணி வைக்குமாறு சொன்னேன். அவனும் கீழே இறங்கி கண்ணி வெச்சான். அப்போதான் நான் பட்டாக்கத்தியால் சிவக்குமாரை வெட்டினேன். அவன் அங்கேயே செத்துட்டான். நான் வீட்டுக்கு வந்துட்டேன்"என்றார். இதைத்தொடர்ந்து சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications