"இந்த 3 கோயில்களையே காணோம்! சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எல்லாம் வேலைக்காகாது!" பொன்.மாணிக்கவேல் பரபர
தமிழகத்தில் பல லட்சம் சிலைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பொன்.மாணிக்கவேல் குற்றஞ்சாட்டினார்.
விழுப்புரம்: கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 3 கோயில்களே மாயமாகியுள்ளதாகப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்த அவர், மேலும் பல லட்சம் சிலைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஐஜியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல். இவர் பதவியில் இருந்த போது, பல கடத்தல் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற பிறகு இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கோயில்களில் சுவாமி சிலைகள் திருடப்படுவதாகத் தொடர்ந்து கூறி வருகிறார்.

பொன்.மாணிக்கவேல்
இதனிடையே முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் விழுப்புரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், "விழுப்புரத்தில் இருக்கும் 38 சோழர் கால சிவன் கோயில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. முதல்கட்டமாக கள்ளக்குறிச்சி திருநாவலூரில் ஆய்வு செய்துள்ளோம். இங்கே ஸ்ரீகலிநாரீஸ்வரர் கோயில், திருவேற்றளி மகா விஷ்ணு கோயில் உள்ளிட்டவை வழிபாட்டில் இருந்தன.

3 கோயில்கள் மாயம்
ஐரோப்பிய ஆய்வாளர்கள் இந்த கோயில்களை 1902ஆம் ஆண்டிலேயே ஆவணப்படுத்தினர். இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு போதிய பராமரிப்பு இல்லாமல் போனது. இதனால் ஸ்ரீகலிநாரீஸ்வரர் கோயில், திருவேற்றளி மகா விஷ்ணு, அகஸ்தூவரம் கோயில்களில் இருந்த மூலவர் சிலைகள் திருடப்பட்டன. அதேபோல உற்சவர் சிலைகள், கல்வெட்டுகளும் படிப்படியாகத் திருடப்பட்டன. இப்போது அந்த கோயில்களின் அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டன.பக்தஜனேஸ்வரர் கோயில் மட்டுமே இருக்கிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

புகார் அளிப்போம்
விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள ஏம்பூரில் இருக்கும் பழமையான கோயிலிலும் இப்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அங்கிருந்த திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி சுவாமி சிலைகள் பல கோடி மதிப்புடையது. அவை மாயமாகியுள்ளன. இந்த இரு ஐம்பொன் சிலைகளும் ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.. எனவே, சிவனடியார்கள் மூலம் போலீசாரிடம் புகார் அளிக்கவுள்ளோம். அதேபோல அபிராமேஸ்வரா் கோயிலில் திருப்பணி என்று ஒலி எழுப்பும் கோயில்கள் திருடப்பட்டன. அவை எங்கே என இதுவரை தெரியவில்லை.

அதிகாரிகள் தவறிவிட்டனர்
இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் அதிகாரிகளிடம் செல்வோம். அவர்களும் நடவடிக்கை மடுக்க மறுத்தால் நிச்சயம் நீதிமன்றம் செல்வோம். திருநாவலூரில் மாயமான பல்லவர் காலத்து 3 கோயில்களையும் கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இவை மட்டுமில்லை இப்போது அமெரிக்காவில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் சுவாமி சிலைகள் தமிழ்நாட்டின் கோயில்களில் இருந்து கடத்தி செல்லப்பட்டவை தான். அன்று பணியில் இருந்த அதிகாரிகள் தங்கள் பணியை முறையாகச் செய்யத் தவறியதே இதற்குக் காரணம்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
மூலவர், உற்சவர் சிலைகள் திருடப்பட்டன. பல இடங்களில் கோயில்களே மாயமாகின. இந்த விவகாரத்தில் முழு விசாரணை தேவை. தற்போது இருக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் இந்த வழக்கைக் கொடுப்பது சிறப்பாக இருக்காது. இதற்காகத் தனிக் குழு அமைக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகள், போலீஸ் எஸ்பி, 10 ஆண்டுகள் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இப்படிச் சிறப்புக் குழுக்களை அமைத்து விசாரணையை அங்கு ஒப்படைத்தால் மட்டுமே கோயில் சிலைகள் திருட்டு தடுக்கப்படும்.

3.50 லட்சம் கோயில் சிலைகள்
கோயில் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்யவே 60+ நாட்களை எடுத்துக் கொள்ளும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அப்போதும் வழக்குப்பதிவு செய்யாமல் மற்றொரு பிரிவுக்குத் தான் மாற்றுவார்கள்.. தமிழ்நாட்டில் இப்போதும் கூட சுமார் 3.50 லட்சம் சுவாமி சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. அந்த சிலைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications