திமுகவினர் கனவில் கூட நினைச்சிருக்க மாட்டாங்க..பொன்முடிக்கு எதிராக அதிமுக மிகப்பெரிய மூவ்!
விழுப்புரம் : அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கில், அரசுத்தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடித்த நிலையில், நீதிமன்றத்துக்கு உதவி செய்ய அனுமதி கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி,கடந்த 2006 முதல் 2011 வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் சேர்ந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே செம்மண் எடுத்ததாக கூறப்படுகிறது. செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிமாக மண் எடுத்த காரணத்தால் தமிழக அரசுக்கு 28.37 கோடி இழப்பு ஏற்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த வந்தது. அரசு தரப்பில் இதுவரை 67 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் நீதிமன்றத்தில் சாட்சி தெரிவித்துள்ளனர். இதில் 7 முக்கிய சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடித்தனர். இதனால் பொன்முடி வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த விசாரணையில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனர் சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்தார். இதேபோல் அரசு அதிகாரிகள் பலரும் பிறழ் சாட்சியம் அளித்ததால் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடித்து வருவதால், இந்த வழக்கில் அதிமுக தலையிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டுவர தன்னையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக அமைச்சரின் வழக்கில் அதிமுக தலையிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பொன்முடி வழக்கு உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து விசாரித்து வரும் நிலையில், அதிமுகவும் பொன்முடிக்கு எதிராக களம் இறங்கி இருப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
-
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்











Click it and Unblock the Notifications