2வது குழந்தை அப்படியே அப்பனை உருச்சிவச்சிருக்குனு சொன்னதால் தாக்கிய செஞ்சி பெண்.. கள்ளக்காதலன் பகீர்
விழுப்புரம்: குழந்தைகளை பெற்றதால் அழகு போய்விட்டதாகவும் இளைய மகன் கணவனை போல் இருப்பதாக தான் சொன்னதால்தான் துளசி தனது குழந்தையை கடுமையாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து அனுப்பினார் என செஞ்சியில் குழந்தையை தாக்கிய பெண் விவகாரத்தில் அவரது கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மணலப்பாடி மதுர கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவர் ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி (23) என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்த நிலையில் ஊரடங்கால் வேலை இல்லாததால் மோட்டூருக்கே திரும்பினர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்..

இளைய மகன்
இந்த நிலையில் அவரது செல்போனை ஆராய்ந்த போது அதில் இளைய மகன் பிரதீப்பை துளசி கடுமையாக அடித்து துன்புறுத்தியதை அறிந்து வடிவழகன் அதிர்ந்தார். இது போல் அந்த குழந்தையை மட்டும் தாக்கும் நிறைய வீடியோக்கள் இருந்தன. பின்னர் போலீஸில் வடிவழகன் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆந்திராவில் இருந்த துளசியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்தவருடன்
இதையடுத்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக துளசி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவருக்கும் சென்னையைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (31) இடையே தகாத உறவு ஏற்பட்டதை வடிவழகன் போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து துளசியை விசாரித்த போது அவர் தனக்கு இருக்கும் கள்ளக்காதலை ஒப்புக் கொண்டார்.

கள்ளக்காதலுக்கு இடையூறு
மேலும் விசாரணையில் கள்ளக்காதலுக்கு தனது கணவர் இடையூறாக இருப்பதால் குழந்தை மீது கோபம் கொண்டு அடித்து தனது கோபத்தை தீர்த்து கொண்டேன் என தெரிவித்தார். மேலும் இவர் வீடியோக்களை எடுத்து கள்ளக்காதலன் மணிகண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் குழந்தையை தாக்கினால் கணவரை பிரிந்து விடலாம் என்பதால் குழந்தையை தாக்கியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை
இதையடுத்து கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் அறந்தாங்கியில் உள்ள தனது சித்தியின் மகன் வீட்டில் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் விரைந்து சென்று மணிகண்டனை பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.

செல்போனில் பேச்சு
விசாரணையில் அவர் பகீர் தகவல்களை அளித்துள்ளார். சென்னையில் வசிக்கும் போதுதான் துளசியுடன் தகாத தொடர்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனாவால் அவர்கள் சொந்த ஊர் சென்ற போதும் அந்த தொடர்பு நீடித்தது. அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி கொண்டிருந்துள்ளனர்.

அப்பனை போல் இருக்கு
அப்போது குழந்தைகளை பெற்றதால் உன் அழகு போய்விட்டதாக துளசியிடம் கூறிய மணிகண்டன், இளைய மகன் பிரதீப், வடிவழகனை போல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கள்ளக்காதல் கண்களை மறைத்ததால் அந்த குழந்தையை கண்மூடித்தனமாக அடித்து அதை வீடியோவாக எடுத்து காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார் துளசி. கடந்த 50 நாட்களுக்கு முன் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு துளசியை ஆந்திராவுக்கு அனுப்பிவிட்டார் வடிவழகன். அப்போதுதான் துளசியின் அட்டூழியங்கள் அவரது செல்போன் மூலம் வடிவழகனுக்கு தெரியவந்தது.

அதிர்ச்சி
மணிகண்டனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடி கிராமம் ஆகும். இவரது பெயரை பிரேம்குமார் என கூறியே துளசியிடம் பழகி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டனை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்காதலுக்காக குழந்தையை கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து கள்ளக்காதலனுக்கு அனுப்பிய இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications