Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் நகை மட்டுமே விழுப்புரம் அருண்மொழிக்கு டார்கெட்.. என்னாது 20 பெண்களா? 17 சவரன் தங்கத்தால் வினை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தங்க நகைகள், நிலம், கட்டுக்கட்டாக பணம் போன்றவற்றுக்காக ஆசைப்பட்டு, இளம்பெண்களிடம் நெருங்கி பழகி மோசடி செய்யும் நபர்கள் பெருகி கொண்டிருக்கிறார்கள்.. இந்த மோசடியை எளிதாகவும் , சந்தேகம் வராதபடி செய்வதற்காகவும், இதுபோன்ற மோசடிக்காரர்கள் தேர்ந்தெடுப்பது ஆன்லைன் மேட்ரிமோனியலைதான். இந்த திருமண மோசடிகளுக்கு ஆண், பெண் இரு தரப்பினருமே விலக்கு இல்லை... இதோ இப்போதும் ஒரு அதிர்ச்சி சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 29 வயது இளம்பெண்.. காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. எனினும் டிஆர்பி தேர்வுக்கான தயாரிப்பிலும் தீவிரமாக இருந்தார்.

Gold Jewellery Villupuram 17 Sovereign

இவருக்கு வீட்டில் வரன் பார்க்கும் முயற்சியில் குடும்பத்தினர் இறங்கி உள்ளனர்.. இதற்காக மேட்ரிமோனியலில் மகளின் விவரங்களையும் பதிவு செய்தனர். சென்னை பூவிருந்தமல்லி ஜேஜே நகரை சேர்ந்த அருண்மொழி என்ற 36 வயது நபரும் இதே மேட்ரிமோனியலில் ஏற்கனவே பதிவு செய்திருந்தார்.

17 சவரன் தங்க நகை

இந்நிலையில் இரு குடும்பத்தினரும் கடந்த மார்ச் மாதம் முதல் ஒருவருக்கொருவர் பேசிவந்துள்ளனர்.. உன்னைதான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் என்று ஆசிரியைக்கு அருண்மொழி வாக்கு தந்தார்.. நெருங்கி பழகினார்.. அடுத்த சில நாட்களில் தன்னுடைய செலவுகளுக்காக பணம் வேண்டும் என்று பெண்ணிடம் கேட்டார்.. பிறகு நகைகளும் தேவைப்படுவதாக சொன்னார்..

அருண்மொழி கேட்டபோதெல்லாம் அந்த பெண்ணும் பணத்தையும், நகைகளையும் தந்து கொண்டேயிருந்தார்.. அந்தவகையில் 17 சவரன் நகையும், ரூ.2.5 லட்சமும், டூவீலர், ஐபோன் உட்பட ஏகப்பட்ட காஸ்ட்லி பொருட்களையும் அருண்மொழிக்கு இளம் பெண் தந்துள்ளார்.

ஃபிசிக்ஸ் டீச்சர்

இதற்கு பிறகு அருண்மொழியின் நடத்தை திடீரென மாறத் தொடங்கியது.. டீச்சரிடம் சரியாக பேசுவதில்லை.. போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்துள்ளார்.. இப்படியே இரண்டு மாதங்கள் ஓடியிருக்கின்றன.. அதேபோல மீட்டு தருவதாக சொன்ன நகைகள், திருப்பி தருவதாக சொன்ன பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை..

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்த டீச்சர், மயிலம் போலீசுக்கு ஓடினார்.. அருண்மொழியை எதிர்த்து முறையிட்டார்..

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.. இறுதியில் தனிப்படை போலீசார் நேற்று அருண்மொழியை அதிரடியாக கைது செய்து மயிலம் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் பல பகீர் தகவல்களை கூறி போலீசாரையே திகைக்க வைத்தார் அருண்மொழி.

தங்க நகைகள்

அதாவது ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவராம் அருண்மொழி.. இரவும் பகலும் விளையாடி, ஆன்லைனில் பணத்தை இழந்து நஷ்டத்தையும் சந்தித்துள்ளார்.. இந்த நஷ்டத்தை ஈடு செய்யவே, மோசடி காரியங்களில் இறங்க ஆரம்பித்தாராம்..

மேட்ரிமோனியலில் பெண்களை ஏமாற்ற துவங்கியிருக்கிறார்.. முதலில் ஒரு பெண்ணை ஏமாற்றி பணம், நகைகளை பறித்து தப்பியிருக்கிறார்.. இதனால் கையில் ஏகப்பட்ட பணம் புரண்டுள்ளது.. இந்த பழக்கம் அருண்மொழிக்கு பிடித்துவிட்டதால், அடுத்தடுத்த பெண்களையும் ஏமாற்ற துவங்கினார்..

இப்படியே 20க்கும் மேற்பட்ட பெண்களை இப்படியே ஏமாற்றி, பல லட்ச ரூபாயை மோசடி செய்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது..

20 பெண்கள்

இத்தனை தகவல்களும் விசாரணையில் உறுதியானதும், மயிலம் போலீசார் அவரை அதிகாரப்பூர்வமாக கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஆன்லைன் உறவுகள் எப்படி ஆபத்தாக மாறக்கூடும் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் உள்ளது.. ஆனால் அருண்மொழியால் நகைகளை, பணத்தை இழந்தவர்கள் யார் யார் என்று தெரியவில்லை.. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+