Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

35,000 மாத்திரைகள், மோசடி கூட்டணிகள்.. விழுப்புரம் ஆசிரமம் குறித்து தேசிய குழந்தைகள் ஆணையர் பேட்டி

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் கட்டாய மதமாற்றம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இது தொடர்பாக சட்டரீதியான வழக்கு விசாரணை ஒருபுறமும், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை மறுபுறமும் என கொந்தளித்து கிடக்கிறது.. தற்போது அந்த ஆசிரமம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி பதற வைத்து வருகிறது.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபன்பேபி... இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் "அன்பு ஜோதி" ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வருபவர்.

15 வருடங்களாக, லைசென்ஸ் எதுவுமே இல்லாமல் இந்த ஆசிரமத்தை நடத்தி வந்திருக்கிறார்.. இந்த ஆசிரமத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிளம்பின. போலீஸார் ஆசிரம விவகாரத்தை சீரியஸாக அணுகிஉள்ள நிலையில், அங்கு அரங்கேறிய கொடூரங்கள் ஒவ்வொன்றும் வெளியாகி பலரையும் பதற வைத்தது.

சங்கிலிகள்

சங்கிலிகள்

இங்குள்ள வயதானவர்களை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்துள்ளார்கள்.. மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தி உள்ளார்கள்.. ஆதரவற்றவர்கள் என்பதால், ஏகப்பட்ட கொடுமைகளை செய்திருக்கிறார்கள்.. பெண்களுக்கு பாலியல் கொடுமை தரப்பட்டுள்ளது.. அவர்கள் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களை ரூம்களில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். இவர்களை கடித்து குதறுவதற்காகவே குரங்குகளை ஆசிரமத்தில் வளர்த்து வந்திருக்கிறார்கள்.. இந்த ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாக திடீரென குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் மீது கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பாய்ந்த குரங்குகள்

பாய்ந்த குரங்குகள்

ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையமும் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்... பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், துன்புறுத்தலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட 16 பெண்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் கல்பாக்கம் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.. மேலும், இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் ஸ்டேஷனில் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. 4 நாட்களுக்கு முன்பு, சிபிசிஐடி போலீசார், விசாரணை குறித்து சில தகவல்களை கூறியிருந்தனர்.

உடலுறுப்புகள்

உடலுறுப்புகள்

அதன்படி, ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் யாரிடமும் உடல் உறுப்பு எடுக்கப்படவில்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாம்.. வெளிநாடுகளில் இருந்து எந்தவித நிதியும் கடந்த சில ஆண்டுகளாக வரவு வைக்கப்படவில்லை என்பதும் தெளிவாகி உள்ளதாம்.. பெங்களூருவில் விசாரணை முடிவடைந்த நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காணாமல் போன இன்னும் சிலரை பற்றியும் விசாரணை செய்து வருகிறோம் என்றும் அனைத்து விசாரைணயும் முடிவடைய இன்னும் ஒரு மாதமாகும். அதன் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தூங்கும் பாயில் ரத்தம்

தூங்கும் பாயில் ரத்தம்

இப்படி விசாரணை நடவடிக்கைகள் ஒருபக்கம் வேகம் எடுத்தபோதிலும், ஆசிரமம் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகி கொண்டேயிருக்கின்றன. இந்த காப்பகத்தில் தங்கியிருந்தவர்களுக்கு ரேஷன் அரிசியில்தான் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.. மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி ஆசிரமத்தில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலிகள், அவர்களை தாக்குதலுக்கு பயன்படுத்திய தடிகள், கம்புகள் உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆசிரமத்திற்கு அருகே ரத்தக்கறை படிந்த பாய் ஒன்று கிடந்ததாம்.. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் 8 வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

மர்ம அறைகள்

மர்ம அறைகள்

அதேபோல, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த ஆர்.ஜி.ஆனந்த் உட்பட 3 பேர் அன்புஜோதி ஆசிரமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட வருவாய்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வின் முடிவில், ஆசிரமத்தின் குறிப்பிட்ட 2 ரூம்களை பூட்டி சீல் வைத்திருக்கிறார்கள்.. காரணம், ஆசிரமத்தின் முறைகேடுகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் அங்கே இருப்பதால்தான், இப்படி சீல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறார்கள்.

டார்க் ரூம்

டார்க் ரூம்

இதையடுத்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அன்புஜோதி ஆசிரமத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகம் நடந்திருக்கின்றன... ஆசிரமத்தில் தங்கியிருந்து இப்போது கீழ்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வரும் சிலரை சந்தித்தபோது ஆசிரமத்தின் "டார்க் ரூம்" என்பது பற்றி சொன்னார்கள்.. இந்த மர்ம அறையில் 'சிகிச்சை' என்ற பெயரில் விளக்குகளை அணைத்துவிட்டு சில மாய நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவர் மனதிலும் மத நம்பிக்கைகளை திணித்திருக்கின்றனர்..

போதை வஸ்துகள்

போதை வஸ்துகள்

மேலும் இந்த ரூமில், வெவ்வேறு பெயரிலான ஒரே தேவைக்கான சுமார் 35 ஆயிரம் மாத்திரைகளை கைப்பற்றியிருக்கிறோம்.. இவை உட்பட பல்வேறு போதை மருந்துகளை இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தோருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. இல்லத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் பெரும் மோசடி நடந்திருக்கிறது. சாலையோரம் தூங்கியவர்கள், கடந்தவர்கள் என பலரையும் மடக்கி, அவர்களின் நகை உள்ளிட்ட உடமைகளை பறித்துக்கொண்டு முடமாக்கி இல்லத்தில் சேர்த்து இருக்கின்றனர்.

சீக்ரெட் ரூம்

சீக்ரெட் ரூம்

2021ல் இவர்கள் தாக்கல் செய்த அறிக்கையின்படி, அன்புஜோதி ஆசிரமத்தில் 60 நபர்களுக்கு மட்டுமே தங்க அனுமதி உண்டு. ஆனால் 180 பேர் வரை அடைத்திருக்கின்றனர். அன்புஜோதி ஆசிரமத்துக்கு புதுச்சேரி, கர்நாடகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்கள் என சுமார் 8 மாநிலங்களில் இதுபோலவே ஆசிரமம் வைத்து செயல்படுவோரோடு மோசடி கூட்டணி இருந்திருக்கிறது.. உதாரணமாக இவர்களுடன் தொடர்பில் உள்ள, பெங்களூரு ஆசிரமம் ஒன்று இதே அளவு நெருக்கடியான இடத்தில் பல நூறு நபர்களை அடைத்து வைத்திருக்கிறது. எனவே, நாங்கள் அங்கேதான் எங்களுடைய அடுத்தக்கட்ட ஆய்வை மேற்கொள்ள போகிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+