மூக்கில் டியூப்புடன்.. சங்கீதாவின் "நெருப்பு" வார்த்தையை கேட்டு ஷாக்கான ஜட்ஜ்.. நடுங்கிய கண்டமங்கலம்

தீவைத்து கொளுத்தப்பட்டு உயிரிழந்த பெண், மரண வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: உடம்பெல்லாம் வெந்துபோய், மூக்கில் டியூப்புடன், மூச்சு திணறிக் கொண்டே சங்கீதாவின் மரண வாக்குமூல வார்த்தைகள் நெருப்பென இணையத்தை சுட்டுக்கொண்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு டிரைவர்.. இவரது மனைவி பெயர் சங்கீதா.. 24 வயதான இவர், ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர்.. இருவருமே காதலித்துதான் திருமணம் செய்து கொண்டனர்..

முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், அதனை சங்கீதா தட்டிக் கேட்டுள்ளார்.. இதுவே கணவன் மனைவிக்கு இடையே தகராறு வர முக்கிய காரணமாக இருந்திருக்கிறது..

 நெருப்பு பகீர்

நெருப்பு பகீர்

ஆனால், தன் மீதான தவறை மறைக்க, முத்துக்குமார், வரதட்சணை விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.. அவருடன் முத்துக்குமாரின் அக்கா கலையரசியும் சேர்ந்து, சங்கீதாவிடம் வரதட்சணை அதிகம் வாங்கி வரும்படி தொந்தரவு செய்து வந்துள்ளனர்.. இதற்கு சங்கீதா மறுத்துள்ளார்.. கடந்த 5ம் தேதியும் இந்த சண்டைதான் நடந்துள்ளது.. அப்போது சங்கீதாவுக்கு பின்பக்கமாக வந்து, திடீரென மண்ணெண்ணெய்யை 2 பேரும் சேர்ந்து ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.. நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் பிள்ளைகளை கொளுத்திவிடுவதாக மிரட்டவும்தான், யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்..

கெஞ்சினாரோ

கெஞ்சினாரோ

உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சங்கீதாவை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. முன்னதாக, நீதிபதி மருத்துவமனைக்கே வந்து சங்கீதாவிடம் கேட்டபோதும் பொய்தான் சொன்னார்.. தானே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொன்னார்.. ஆனால், சங்கீதா சொல்வது பொய் என்று சங்கீதாவின் குடும்பத்தினருக்கு தெரியும் என்பதால், சங்கீதாவின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளனர்.. உண்மையை நீதிபதியிடம் சொல்லுமாறு மன்றாடி உள்ளனர்.. அதற்கு பிறகுதான் சங்கீதா உண்மையை சொல்லி உள்ளார்..

 பொய் வாக்குமூலம்

பொய் வாக்குமூலம்

முதலில் நீதிபதியிடம் சங்கீதா பொய்யான வாக்குமூலத்தை தந்தார்.. பிறகுதான் நிஜத்தை சொல்லி உள்ளார். அந்த 2 வாக்குமூலங்களுமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல் வாக்குமூலத்தில், நீதிபதி சங்கீதாவிடம் பெயர் கேட்கிறார், வயது கேட்கிறார், கணவர் பெயர், அவரது வேலை என்ன என்று கேட்கிறார், எத்தனை பிள்ளைகள், அவர்களுக்கு வயது என்ன என்று கேட்கிறார், பிறகு எப்படி இந்த தீவிபத்து நடந்தது? கணவர்தான் காரணமா? என்று கேட்கிறார்.. இது அனைத்திற்கும் சங்கீதா சொன்ன பொய்யான வாக்குமூலம்தான் இது:

 ஸ்டவ் மண்ணெண்ணெய்

ஸ்டவ் மண்ணெண்ணெய்

என் பேர் சங்கீதா.. 24 வயசாகிறது.. எனக்கு 3 பசங்க இருக்காங்க.. ஒருத்தனுக்கு வயசு, இன்னொருத்தனுக்கு 4 வயசு, இன்னொருத்தனுக்கு ஒன்றரை வயசாகுது.. என் கணவர் பெயர் முத்துக்குமார்.. கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகுது.. 2017-ல் கல்யாணம் நடந்தது.. அன்னைக்கு சிலிண்டர் வீட்டில் காலி ஆயிடுச்சு சார்.. அதனால் ஸ்டவ் பற்ற வைக்க மண்ணெண்ணெய் எடுத்தேன்.. ஸ்டவ் எனக்கு அவ்வளவாக பத்த வைக்க தெரியாது.. இருந்தாலும் மண்ணெண்ணைய் எடுத்து, ஸ்டவ்வில் ஊற்றிவிட்டு, மீதி கொஞ்சம் தனியா எடுத்து வெச்சேன்.. அது கீழே கொட்டிவிட்டது..

ஸ்டவ்

ஸ்டவ்

உடனே என் துணியிலும் மண்ணெண்ணெய் ஒட்டிக்கொண்டது.. ஆனால், அதை நான் கவனிக்கவில்லை.. ஸ்டவ் பற்ற வைத்ததுமே என் துணியில் நெருப்பு பற்றிக் கொண்டது.. என் வீட்டுக்காரர் அப்போது தூங்கிட்டு இருந்தார். நான் கத்தி அலறியதும் அவர் ஓடிவந்து என்னை காப்பாற்றினார்.. என் வீட்டுக்காரருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆரம்பத்தில் எங்களுக்குள் சண்டை இருந்தது.. ஆனால், அதுக்கப்பறம் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டார்.. டிரைவராக இருக்கிறார்.. இப்போ ஒழுங்கா இருக்கார்.. அவர் மீது எந்த தப்பும் இல்லை.. நான்தான் மண்ணெண்ணெயை தெரியாமல் ஊற்றிக் கொண்டேன்" என்றார்.

ஜட்ஜ்

ஜட்ஜ்

சங்கீதா இரண்டாவதாக தந்த மற்றொரு மரண வாக்குமூலம் இது: "நான் சங்கீதா பேசறேன்.. என் வீட்டுக்காரர் வரதட்சணை கேட்டு என் அப்பாவை டார்ச்சர் செய்துட்டு வந்தார்.. என்னையும் இழுத்து போட்டு அடிப்பார்.. தீபாவளி முடிந்ததில் இருந்தே நிறைய குடிச்சிட்டு வந்தார்.. அதனால், மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்தி கொள்ள போவதாக சொன்னேன்.. உடனே மண்ணெண்ணையை நிஜமாகவே எடுத்து வந்து, பின்பக்கமாக வந்து ஊற்றி என்னை கொளுத்திட்டார்.. உடனே தண்ணியில் தூக்கி கடாசிவிட்டார்.. தோல் எல்லாம் எனக்கு கழண்டு வந்தது.. உடம்பெல்லாம் பற்றிக்கொண்டது..

 நிஜ வாக்குமூலம்

நிஜ வாக்குமூலம்

நான் கத்தினேன்.. எல்லாரும் ஓடிவந்து தூக்கினாங்க.. ஆம்புலன்ஸ் வந்தது.. என்னை அதில் ஏற்றினாங்க.. உடனே இவர் என்கூட ஆம்புலன்ஸில் வரமுடியாதுன்னு சொன்னார்.. எல்லாரும் திட்டினபிறகு, என்கூட வந்தார்.. வர்ற வழியெல்லாம் என்னை திட்டிட்டே வந்தார்.. நீ மட்டும் உண்மையை சொன்னால், உன்னை கொளுத்தின மாதிரி, பசங்களையும் கொளுத்திடுவேன்ன்னு சொன்னார்.. அதனால்தான், நான் பயந்துட்டு, பசங்களுக்காக, யார்கிட்டயும் உண்மையை சொல்லல.. ஜட்ஜ் கிட்ட, டாக்டர் கிட்ட, போலீஸ் கிட்ட, என் வீட்டுல, எல்லார்கிட்டயும் பொய்தான் சொன்னேன்.. இப்ப உண்மையை சொல்றேன்.. என்னை என் வீட்டில் எல்லாரும் உண்மை சொல்ல சொன்னாங்க.. இதுதான் நடந்த உண்மை" என்றார்.

அரிசி எங்கே

அரிசி எங்கே

இந்த சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. சம்பவ நாளான அதாவது, கடந்த 4ம் தேதி மாலை, வீட்டிற்கு சமைப்பதற்காக அரிசி வாங்கி வரும்படி சங்கீதா, முத்துக்குமரனிடம் பணம் கொடுத்து அனுப்பினாராம்.. ஆனால் முத்துக்குமரன், அரிசி வாங்காமல், அந்த பணத்தை கூனிமுடக்கில் உள்ள டாஸ்மாக்கில் நுழைந்து தண்ணி அடித்துள்ளார். இரவு 11.00 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்... அதனால், அந்த 3 பிஞ்சு குழந்தைகளும், சாப்பாடு இல்லாமல் பட்டினியில் தூங்கி உள்ளனர்.. அதனால்தான், சங்கீதா கணவரிடம் உச்சக்கட்ட கோபத்தில் வாக்குவாதம் செய்துள்ளார்.. குழந்தைகள் பட்டினியாக தூங்குகிறார்களே? ஏன் குடித்துவிட்டு வந்தீங்க என்று கேட்டுள்ளார்.

கொலை பட்டினி

கொலை பட்டினி

குழந்தைகள் பட்டினியில் படுத்துவிட்டார்கள் என்பதை தெரிந்தும்கூட, மறுபடியும் வீட்டில் இருந்து வெளியே போனாராம் முத்துக்குமரன்.. மறுபடியும் டாஸ்மாக்குக்கு சென்றுவிட்டு குடித்துவிட்டு, அன்றைய தினம் நைட் முழுவதும் வீட்டிற்கு வராமல். மறுநாள் 5ம் தேதி காலை 11.00 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.. தொடர்ந்து குழந்தைகள் பட்டினியாக இருக்கவும், கணவனை தட்டிக் கேட்டதுடன், மணமடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பதாக சொல்லி உள்ளார்.. ஆனால், நிஜமாகவே எண்ணெயை எடுத்து நெருப்பை கொளுத்தி வைத்துவிட்டார் முத்துக்குமரன்.

 நெருப்பு வார்த்தைகள்

நெருப்பு வார்த்தைகள்

பரவி வரும் அந்த மரணவாக்குமூல வீடியோவில், முதலில் சங்கீதா பொய்யான வாக்குமூலம் தந்தபோது, தெளிவாக பேசுகிறார்.. ஜட்ஜ் கேட்கிற கேள்விக்கெல்லாம் உடனே பதில் சொல்கிறார்.. திருமண தேதியை ஜட்ஜ், வேண்டுமென்றே மாற்றி சொன்னபோதுகூட, அதை மறுத்து, தன் சரியான திருமண தேதியை சொல்கிறார்.. அதற்கு பிறகு, உண்மையான வாக்குமூலம் தரும்போது, சங்கீதாவுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது போலும்.. மூக்கில் டியூப் வைத்துள்ளார்கள்.. அவரால் தெளிவாக பேச முடியவில்லை.. மூச்சு வாங்குகிறது.. ஆனாலும், நிஜத்தை சொல்லிவிட்டு, மூச்சை ஒரேடியாக நிறுத்திகொண்டார்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+