"திமுகவுக்கு போன ஓட்டுகள்".. அதிமுகவுக்கு அதிர்ச்சி தந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..இதோ டேட்டா
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் அந்த தேர்தலை புறக்கணித்த அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவின் நிலைப்பாடு திமுகவுக்கு சாதகமாகி உள்ளதோடு, அந்த கட்சிகளின் வாக்காளர்களை நம்பிய பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளதை டேட்டா வாரியாக பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமான நிலையில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 82.9 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சி அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா உள்பட 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். அவர்மொத்தம் 124053 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜகவின் பாமக வேட்பாளர் சி அன்புமணி 56296 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இதனால் அன்னியூர் சிவா 67,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா டெபாசிட் இழந்தார். அவர் வெறும் 10,602 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அபிநயா உள்பட 27 பேர் டெபாசிட் இழந்தனர். பாமக வேட்பாளர் தோற்றாலும் டெபாசிட் வாங்கினார்.
இந்த தேர்தலில் அதிமுக களமிறங்காத நிலையில் அந்த ஓட்டுகள் யாருக்கு செல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பொதுவாக இடைத்தேர்தலில் போட்டியிடாத பாமக விக்கிரவாண்டியில் பாஜக கூட்டணியில் களமிறங்கியது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக போட்டியிடாததுவும் ஒன்றும். அதோடு அதிமுகவினரின் ஓட்டுகளை பெற நாம் தமிழர் மற்றும் பாமக இடையே கடும் போட்டி நிலவியது.
அன்புமணி உள்ளிட்ட பாமகவினர், நேரடியாக எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பாடியும், அவர்களின் போட்டோக்களை பயன்படுத்தியும் வாக்கு சேகரித்தனர். அதேபோல் சீமானும் கூட அதிமுகவின் ஓட்டு என்பது நாம் தமிழர் கட்சிக்கு தான் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் கடைசி வரை அதிமுக வினர் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கவில்லை. அதேபோல் தேர்தலை புறக்கணித்த அதிமுக கூட்டணியில் உள்ள விஜயகாந்தின் தேமுதிகவும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்த 2 கட்சிகளின் தொண்டர்கள் பெரும்பாலும், நோட்டாவுக்கும், பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் ஓட்டு போடுவார்கள் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அங்குள்ள நிலைமை என்பது மாறியுள்ளது. அதாவது கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டியில் 82.4 சதவீத ஓட்டு பதிவானது. தற்போது 92.9 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. இதன்மூலம் ஓட்டு சதவீதம் என்பது அதிகரித்துள்ளது. இதனால் அதிமுக, தேமுதிகவினர் தேர்தலை புறக்கணிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
அதேபோல் அந்த 2 கட்சியினரும் நோட்டாவுக்கும் போடவில்லை. ஏனென்றால் கடந்த 2021 தேர்தலில் நோட்டாவுக்கு 1,122 ஓட்டு கிடைத்தது. ஆனால் இப்போது நோட்டாவுக்கு 859 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.இதன்மூலம் அதிமுக, தேமுதிகவினர் நோட்டாவுக்கும் ஒட்டளிக்கவில்லை என்பதையும், தேர்தலையும் புறக்கணிக்கவில்லை என்பதையும் உறுதி செய்ய முடியும்.
மாறாக தி.மு.க.,விற்கு ஓட்டு விழுந்துள்ளது, இது அ.தி.மு.க., தே.மு.தி.க., கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது ஓட்டுகளை எதிர்பார்த்த பா.ம.க., அப்செட் ஆகியுள்ளது. இதற்கு உதாரணம் கூற வேண்டும் என்றால் இடைத்தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அதிமுக, தேமுதிகவின் ஓட்டுகள் என்பது திமுகவுக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி 93,730 ஓட்டுகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84,157 ஓட்டுகள் பெற்றார். இந்த தேர்தலுடன் இடைத்தேர்லை ஒப்பிடும்போது திமுகவுக்கு 30,324 ஓட்டுகள் கிடைத்துள்ளது. இது அதிமுகவின் ஓட்டுகளாக கருதப்படுகிறது.
அதேபோல் கடந்த 2021 தேர்தலில் இந்த தொகுதியில் பாமக போட்டியிடவில்லை. இந்த முறை பாமக போட்டியிட்ட நிலையில் அந்த கட்சி தனது சொந்த பலத்தில் 526,296 ஓட்டுகளை பெற்றுள்ளது. ஏனென்றால் விக்கிரவாண்டியில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக வன்னியர்கள் உள்ளனர். இங்கு பாமகவுக்கு செல்வாக்கு இருக்கும் நிலையில் அதனை வைத்து அந்த கட்சி இவ்வளவு ஓட்டுகளை பெற்றுள்ளது. அதோடு அதிமுக, தேமுதிகவை சேர்ந்தவர்களும் ஓரளவு ஓட்டு போட்டுள்ளனர். இருப்பினும் திமுகவை ஒப்பிடும்போது அதிமுக, தேமுதிகவின் ஓட்டு பாமகவுக்கு குறைவாகவே கிடைத்துள்ளது.
அதேபோல் கடந்த 2021 தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் 8,216 ஓட்டுகள் பெற்றார். இந்த முறை அபிநயா 10,602 ஓட்டுகள் பெற்றார். சுமார் 2,500 ஓட்டுகள் மட்டுமே நாம் தமிழர் கட்சிக்கு தொகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் நாம் தமிழருக்கும், அதிமுகவின் ஓட்டு என்பது கிடைக்கவில்லை என்பதை உறுதியாக கூறிவிட முடியும். இதனால் அதிமுக, தேமுதிகவின் ஓட்டு என்பது திமுகவின் பக்கம் சென்றுள்ளது. தங்களின் ஓட்டு திமுகவின் பக்கம் செல்லாது என அதிமுக, தேமுதிக தலைமை நினைத்த நிலையில் வாக்காளர்கள் இந்த முடிவு இருகட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுபற்றி அதிமுகவினர் கூறுகையில், ‛‛இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதால் புறக்கணித்தோம். விரும்புபவர்களுக்கு ஓட்டளிக்கலாம் என தலைமை கூறியது. மாவட்ட செயலாளர் சிவி சண்முகம், நமக்கு எதிரி தி.மு.க.,தான், அதுக்கு ஓட்டு போடாமல், உங்கள் விருப்பம் போல், யாருக்காவது ஓட்டு போடுங்கள் என்று கூறியிருந்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்களும், மறைமுகமாக பாமகவுக்கு ஆதரவாக ஓட்டுபோடும்படி கூறியிருந்தனர். ஆனால், திமுகவுக்கு அதிகளவில் ஓட்டு சென்றுள்ளது. இதற்கு அவர்கள் பணம் வினியோகம் செய்தது தான் காரணம். அதோடு சாதி சார்ந்த ஓட்டுகள் பிரிந்ததும் முக்கிய காரணமாகும்'' என்றனர்.
-
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா? -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
ரொம்ப ஓவரா போறீங்கடா.. எடப்பாடி பழனிசாமிக்கு உம்மா கொடுத்த அதிமுக வேட்பாளர் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்!












Click it and Unblock the Notifications