India
  • search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அழுதுகொண்டே கிணற்றில் குதித்த பாஜக நிர்வாகி.. கந்துவட்டி டார்ச்சர்.. வீடியோ பார்த்து அதிர்ந்த போலீஸ்

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: பாஜக பிரமுகர் ஒருவர், கந்துவட்டி பிரச்சனையால் சிக்கி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.. தற்கொலைக்கு முன்பு, இளைஞர் வெளியிட்ட வீடியோ, தமிழகம் முழுவதும் அதிர்வை உண்டாக்கி வருகிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த செல்வம் மகன் திருவேங்கடம்.. 21 வயதாகிறது.. பாஜக நகர இளைஞரணி துணைத் தலைவராக உள்ளவர்..

இவர் அதே பகுதியில் இயங்கும் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச் சீட்டு பிடிக்கும் தனியார் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராகவும் வேலை பார்த்து வந்தார்.

ஆபரேஷன் கந்துவட்டி! வசூல்ராஜாக்கள் அட்ராசிட்டியை ஒடுக்க முடிவு! ஐ.ஜி.பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை! ஆபரேஷன் கந்துவட்டி! வசூல்ராஜாக்கள் அட்ராசிட்டியை ஒடுக்க முடிவு! ஐ.ஜி.பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை!

 வீடியோ

வீடியோ

இந்நிலையில், திருவேங்கடம் திடீரென தற்கொலை செய்துள்ளார்.. விஷம் குடித்துவிட்டு, தென்கீரனுார் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து தன்னுடைய செல்போனில் சில வீடியோக்களை பதிவு செய்து, சிலருக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.. இந்த வீடியோவை பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் பதறி போனார்கள்.. இதுகுறித்து உடனடியாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

 கண்ணீர் புகார்

கண்ணீர் புகார்

போலீசாரும் விரைந்து சென்று, அந்த கிணற்றில் இருந்து பொதுமக்கள் உதவியுடன் திருவேங்கடத்தின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்ம் செய்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அந்த வீடியோவில் திருவேங்கடம் கண்ணீருடன் சொல்லி உள்ளது இதுதான்: "நான் வேலை பார்த்த கம்பெனியின் ஓனர், எனக்கு தர வேண்டிய பணம் மொத்தம் ரூ.7 லட்சத்தை திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்...

 கிணறு - சடலம்

கிணறு - சடலம்

அதனால், பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் நான் அவ்வப்போது வாங்கிய பணத்திற்கு, மீட்டர் வட்டி போல் (அதற்கு மேலான வட்டி) என்னிடம் லட்சக்கணக்கில் பலமுறை பணத்தை வசூலித்துள்ளார். ஏற்கனவே பாண்டு பத்திரம், செக்புக், போன்றவற்றில் என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, பல லட்சம் ரூபாய் கேட்டு கெடு விதித்தார்... என்னால், அவ்வளவு பணத்தை உடனடியாக திரட்ட முடியவில்லை. இப்போதைய சூழ்நிலையில் என்னால் பணத்தை திருப்பி தர முடியாத காரணத்தால் என்ன செய்வதென்று தெரியவில்லை... அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்.

 மன உளைச்சல்

மன உளைச்சல்

எனக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி, தற்கொலைக்கு காரணமாக உள்ள என் கம்பெனி ஓனர், பொரசக்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... என்னுடைய அம்மா சித்ரா, தங்கை துர்காதேவி ஆகியோரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று என் நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று உருக்கமாக பேசியுள்ளார்... இதையடுத்து, திருவேங்கடத்தின் அம்மா சித்ரா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

 திருவேங்கடம்

திருவேங்கடம்

அந்த புகாரில், "மகன் திருவேங்கடத்தின் தற்கொலைக்கு காரணமான பன்னீர்செல்வம், வேல்முருகன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதில் சம்பந்தப்பட்ட 2 பேரில் ஒருவர் பன்னீர்செல்வம்.. இவர் பல லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டாராம்.. இன்னொரு நபர் வேல்முருகன்.. இவர்தான் முதல் குற்றவாளி.. ரூ.10 ஆயிரம் கடனுக்கு, ரூ.20 லட்சம் பணம் வாங்கியிருக்கிறார்.. மேலும், ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்..

 அனிதா அட்ராசிட்டி

அனிதா அட்ராசிட்டி

வெறும் 10 ஆயிரத்துக்கு 20 லட்சமும் வாங்கிகொண்டு, ஒரு கோடியும் கேட்டதாலேயே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிணம் கிணற்றில் மிதப்பதை பார்த்து பொதுமக்களே, போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்... இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு, கடலூரில் செல்வக்குமார் என்ற போலீஸ்காரர், அதே கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அனிதா என்ற பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார்.. அந்த பணத்தையும் இவர் செலுத்திவிட்டார்.. ஆனால், அந்த அனிதா புரோ நோட்டை தராமல், 12 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.. மேலும் மேலும் தொந்தரவு செய்யவும் தற்கொலையே செய்துகொண்டார் செல்வகுமார்.

 டிஜிபி அதிரடி

டிஜிபி அதிரடி

இதற்கு பிறகுதான், தமிழக அரசு அதிரடியில் இறங்கியது.. "கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு அமைப்பு தொடங்கப்பட்டது.. கந்துவட்டி தொடர்பாக காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கந்துவட்டிகாரர்களின் இருப்பிடங்களை உடனடியாக சோதித்து, கையெழுத்துப் பெற்ற காகிதங்கள், சட்ட விரோதமான ஆவணங்கள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டார்.. ஆனால், மறுபடியும் ஒரு தற்கொலை சோகம் நடந்துள்ளது..!

English summary
How did kallakkurichi youth body recover by police and what happened in Kanthuvatti issue கள்ளக்குறிச்சில் கந்துவட்டி கொடுமையால் பாஜக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X