Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்ஏ பட பாணியில்.. கள்ளக்குறிச்சி மருத்துவனையில் குழந்தையை தூக்கிய பெண்.. சிக்க வைத்த மாமியார்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: டிஎன்ஏ படம் பாணியில் குழந்தை கடத்தல் சம்பவம் ஒன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் ஆண்குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற பெண் வசமாக சிக்கினார். அவரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதிர்வா,நிமிஷா விஜயன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்பட பலரது நடிப்பில் வெளியான படம் டிஎன்ஏ. இந்த படம் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்துவது தான் கதை. அந்த குழந்தை எப்படி கடத்தப்படுகிறது என்பது பெற்றியும் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தது. அதேபோன்ற ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. நல்ல வேளையாக குழந்தையை கடத்திய பெண் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

How did the woman who lifted the baby from the Kallakurichi hospital get caught in DNA movie style

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் சரவணன்- திவ்யா தம்பதியினருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் மருத்துவமனையில் உள்ள திவ்யாவுடன் அவரது மாமியார் தங்கம்மா என்பவர் உடன் இருந்தார் .

நேற்று முதலே இந்த அரசு மகப்பேறு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த பெண் ஒருவர் தங்கம்மா அருகில் நேற்று இரவு படுத்திருந்த நிலையில் திடீரென அதிகாலை 3 மணியளவில் தங்கம்மாவின் பேரனான பிறந்து நான்கு நாட்களை ஆன பச்சிளம் குழந்தையை அந்தப் பெண் கடத்திக்கொண்டு அங்கிருந்து ஓட முயன்றதாக கூறப்படுகிறது.இதை பார்த்த தங்கம்மா உடனடியாக கூச்சலிட்டார் .

உடன் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்தனர். அவரிடம் இருந்த குழந்தையை கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் வந்தவுடன் அந்த பெண்ணை விசாரிக்காமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என எண்ணிய பொது மக்கள் திடீரென கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காவல் ஆய்வாளர் ராபின்சன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழந்தை கடத்திய பெண்ணுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தரப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+