Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி நந்தினி.. உலகத்திலேயே யாருக்குமே அமையக்கூடாத மாமியார்.. வாக்குமூலம் பாருங்க

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: நானும், எனது மகனும் ஊரில் நல்ல வசதியுடனும், மரியாதையுடனும் வாழ்ந்து வந்தோம். ஆனால் எனது மகனை 2-வதாக திருமணம் செய்து எங்கள் குடும்பத்தை சீர்குலைத்த நந்தினியை தீர்த்துக்கட்ட விரும்பினேன்.. எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணினேன். பல மாதங்களாக இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தே என் தோழியுடன் கைதான மாமியார் கிறிஸ்தோப்மேரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த நந்தினி(வயது 29) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரை 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா வாழ பிடிக்காமல் தவறான முடிவெடுத்த உயிரை விட்டு விட்டார். தனிமையில் வசித்து வந்த நந்தினி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சங்கராபுரம் அருகே விரியூரை சேர்ந்த சாலமோன் மகன் பிசியோதெரபிஸ்ட்டான மரிய ரொசாரியோ(36) என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

In Kallakurichi the mother-in-law gave a statement against her daughter-in-law what happened

இது மரிய ரொசாரியோவின் தாயான கிறிஸ்தோப்மேரிக்கு(55) சுத்தமாக பிடிக்கவில்லை.. ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாழ பிடிக்காமல் உயிரைவிட்டவர் என்பதை அறிந்த கிறிஸ்தோப் மேரி ஆரம்பம் முதலே கோபப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி மாமியார்-மருகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி கிறிஸ்தோப்மேரி, குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க கோவிலில் மாந்திரீகம் செய்யலாம் என்று மாமியார் கிறிஸ்தோப்மேரி கூறினாராம். இதனை நம்பி சென்ற நந்தினியை கழுத்தை அறுத்து கொலை செய்தாராம் மாமியார்.

இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்தோப்மேரி மற்றும் அவரது தோழி எமிலி(52) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக கிறிஸ்தோப்மேரி போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறுகையில், நானும், எனது மகனும் ஊரில் நல்ல வசதியுடனும், மரியாதையுடனும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் எனது மகனை 2-வதாக திருமணம் செய்து எங்கள் குடும்பத்தை சீர்குலைத்துவிட்டார் நந்தினி. அவரால் மரியாதை போய்விட்டது. எனவே கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். பின்னர், எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன்.

இதற்காக பல மாதங்களாக நந்தினியை கொலை செய்யும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். இதனால் கடந்த 4 மாதமாக எனது மருமகள் நந்தினியிடம் நன்றாக பழகுவது போல் நடித்தேன்.இதுகுறித்து எனது தோழியான எமிலியிடம் தொிவித்தேன். அதற்கு எமிலி, உனது மருமகளை மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்து வா என்றும், அங்கு வைத்து அவரை கொலை செய்துவிடலாம் என்று தெரிவித்தார்.

அந்த திட்டத்தின்படி 29-ந்தேதி அதிகாலை நந்தினியை அழைத்து கொண்டு நானும் எனது தோழி எமிலியும் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு மணிமுக்தாற்றின் கரையோரம் சென்றோம். அங்கே பூஜை செய்யும்போது கண்ணை மூடிக்கொள் என்று கூறி, நந்தியின் கையில் எலுமிச்சை பழத்தை கொடுத்தேன். எமிலி பூஜை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் நான் பின்பக்கமாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன். பின்னர், நந்தினியின் தலைமுடியை பிடித்து இழுத்து அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்துவிட்டேன். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தலையை தனியாகவும், உடலை தனியாகவும் ஆற்றங்கரையில் புதைத்துவிட்டு நானும், எமிலியும் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு சென்றுவிட்டோம். எனது மகன் போலீசில் புகார் கொடுத்ததால் சிக்கிக்கொண்டோம்" இவ்வாறு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+