ரோடு போட்டு கொடு! கொடுப்பியா? சாமி ஆடிய பெண்! உறுதி கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்! ஒரே பரபரப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், பெண் ஒருவர் திடீரென சாமி ஆடியது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் பெண்கள் சாமி ஆடுவதற்கும் அப்படி என்ன தான் பந்தமோ தெரியவில்லை, இதுவரை இது போன்ற நிகழ்வு 3 இடங்களில் நடந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத தீர்த்த திருக்குடம் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம், '' ஜெயிக்க வச்சதுக்கு என்னப்பா செஞ்ச, அமைச்சர் ஆனதிலிருந்து தொகுதிக்கு என்ன செஞ்சீங்க, நான் உன்னை ஜெயிக்க வச்சனா இல்லையா'' என பெருங்குரலில் சாமி ஆடிய படி ஒரு பெண் முழக்கமிட்டதை யாரும் மறக்க முடியாது.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் நேற்று சாமி ஆடிய படி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனிடையே அப்போது அமைச்சர் பெரியகருப்பன் மேடைக்கு வராததால் இது பெரிதாகவில்லை.
இந்நிலையில் அடுத்ததொரு நிகழ்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நயம்பாடி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்ட நிலையில், அங்கிருந்த பெண் ஒருவர் சாமி வந்துவிட்டதாக கூறி சாமி ஆடினார். இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே சாமி ஆடிய பெண்ணை கண்டு ஜெர்க் ஆகாமல் அவரை தனது அருகில் அழைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், என்னம்மா வேணும் எனக் கேட்டார். அதற்கு தங்கள் பகுதிக்கு ரோடு போட்டுக்கொடுக்கணும், கொடுப்பியா என உறுதிக்கேட்டார் அந்தப் பெண். இதையடுத்து சாலை அமைப்பதற்கான நிலத்தை உரியவர்கள் வழங்கினால் ரோடு போட்டுக் கொடுக்கலாம் என்ற உறுதியை வழங்கினார். மேலும், சாமி ஆடிய பெண்ணின் கையில் லட்டை கொடுத்து அமைதிப்படுத்தினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications