உள்ளாட்சித் தேர்தல் பணியில் இருந்த ஆசிரியர் மாரடைப்பால் மரணம் - விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப்பள்ளி ஆசிரியர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மைலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கட்டாங்கொளத்தூர்,மதுராந்தகம், அச்சரபாக்கம் சித்தாமூர் புனித 4 ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலானது நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்கு பதிவானது சுறுசுறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பதட்டமான வாக்குச்சாவடிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கட்டாங்கொளத்தூர்,சித்தமனுர், அச்சரப்பாக்கம் மதுராந்தகம் உள்ளிட்ட 4 ஒன்றியங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 4 ஒன்றியங்களில் மொத்தம் 970 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு அதில் பதட்டமான வாக்குசாவடிகளாக 120 வாக்குசாவடிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த வாக்குசாவடிகளில் கூடுதல் காவல்துறையினர்களும் மேலும் சிசிடிவி கேமராகள் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விடூர் வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவாசகம் விழுப்புரம் வா.பகண்டை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். தேர்தலுக்காக விடூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை நேற்று செய்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு இரவு ஒரு மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக உறவினர்கள் அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மைலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications