முதல்ல குழந்தை பிறந்துடுச்சு.. அப்பறம்தான் கோகிலாவுக்கு கோலாகல கல்யாணம்.. விழுப்புரம் காதல் கலாட்டா

பெற்ற குழந்தை கண் முன்பு நடந்த தாயின் திருமணம் நடந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: குழந்தை முதல்ல பிறந்துடுச்சு.. அப்பறம் அந்த குழந்தை கண்முன்னாடியே தாயின் திருமணமும் நடந்துள்ளது.. இது திண்டிவனம் சம்பவம் ஆகும்!

திண்டிவனம் அருகே தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி கோகிலா.. இவர் பரமசிவன் என்பவரை காதலித்தார்.. பரமசிவம் கோகிலா வசித்து வரும் பகுதியை சேர்ந்தவர்.

lovers marriage after baby born near villupuram

வயசு கோளாறு.. சூழ்நிலை.. இருவருமே எல்லை மீறி விட்டனர்.. கோகிலா கர்ப்பமானார்... இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை.. வீட்டில் சொல்லவும் முடியவில்லை.. ஆனாலும் வயிற்றை மறைத்து கொண்டு காலேஜ்-க்கு சென்று வந்தார்.

மாதம் வளர தொடங்கியதும், வயிறும் வளர்ந்தது.. அதற்கு மேல் மூடி மறைக்க முடியவில்லை.. பிரசவ வலி வந்து கதறினார் கோகிலா.. இதை பார்த்து பதறிய பெற்றோர், உறவினர்கள் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு கோகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகுதான் அந்த பெண்ணிடம் நடந்தது குறித்து பெற்றோர் விசாரித்தனர்.. பரமசிவன்தான் எல்லாத்துக்கும் காரணம் என தெரியவந்ததும் கொதித்து போயினர்.. கல்யாணம் ஆகாமலேயே தன் மகள் குழந்தைக்கு தாயானதை நினைத்து கதறினர்.. போலீசில் பரமசிவன் மேல் புகாரும் தந்தனர்.

இது சம்பந்தமாக போலீசாரும் பரமசிவனை விசாரித்தனர்.. அப்போது கோகிலாவை கல்யாணம் செய்து கொள்ள பரமசிவன் பரிபூரண சம்மதம் தந்தார்.. பின்னர் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் மட்டுமல்ல.. பிறந்த குழந்தையின் முன்னிலையிலும் இருவருக்கும் கல்யாணம் நடந்தது.. குழந்தை பெற்ற பிறகு நடந்த இந்த கல்யாணம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+