விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடு மேய்த்த கர்ப்பிணிக்கு சாலையோரம் பிரசவம்..108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியளாருக்கு குவியும் பாராட்டு

Google Oneindia Tamil News

விழுப்புரம்: செஞ்சியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, சாலையோரத்தில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Recommended Video

    கர்ப்பிணிக்கு சாலையோரம் பிரசவம் பார்த்த... ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முல்லை நகர் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவருடைய மனைவி 30 வயதான குமாரி.

    நிறைமாத கர்ப்பிணியான இவர், செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இன்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் வலியால் அலறித்துடித்தார்.

    Many congrats 108 ambulance paramedics who helped a pregnant woman to have safe delivery in roadside

    அந்த வழியாகச் சென்றவர்கள் இதைக் கண்டு உடனடியாக, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அய்யனார், ஓட்டுநர் செல்வமணி ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    சாலையோரம் படுத்திருந்த குமாரிக்கு அங்கேயே பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையையும், தாயையும் ஆம்புலன்சில் ஏற்றி செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    Many congrats 108 ambulance paramedics who helped a pregnant woman to have safe delivery in roadside

    தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்க நேரத்தில் சமயோஜிதமாக உதவிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    அந்த பெண் ஏன் அங்கே சென்றார்?.. மைசூரில் பெண் கூட்டு வன்புணர்வு.. கர்நாடக அமைச்சர் பகீர் கருத்து அந்த பெண் ஏன் அங்கே சென்றார்?.. மைசூரில் பெண் கூட்டு வன்புணர்வு.. கர்நாடக அமைச்சர் பகீர் கருத்து

    English summary
    A lady in Gingee delivered a baby boy on the roadside near Gingee. 108 ambulance paramedics helped the lady.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X