செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடி, கவுதம் சிகாமணி 3 மணி நேரமாக விழுப்புரம் நீதிமன்றத்தில் காத்திருப்பு
விழுப்புரம்: அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக தொடரப்பட்ட வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவருடைய மகனும் எம்பியுமான கௌதம் சிகாமணி இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் மூன்று மணி நேரமாக காத்திருக்கின்றனர்.
தமிழக அமைச்சர் ஒருவரும், லோக்சபா எம்.பி.யும், நீதிமன்றத்தில் காத்திருந்த சம்பவத்தால் திமுகவினர் அதிக அளவுக்கு கோர்ட் வெளியே குவிந்துள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த அதிமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவருடைய மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். கவுதம் சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் பொன்முடி ஆஜர்
இந்த நிலையில், வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று, விசாரணைக்கு வந்தது. நீதிபதி இளவழகன் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி உள்ளிட்டோர் ஆஜராகினர்.

காத்திருக்க வைப்பு
இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான நகலை வழங்குவதற்காக இரண்டு முறை உள்ளே அழைத்து பின்பு காத்திருக்க வைத்தனர்.

வராண்டாவில் காத்திருப்பு
இதனால் நீதிமன்ற வளாகத்தில் வராண்டாவில் கடந்த மூன்று மணி நேரமாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான, கவுதம சிகாமணி உள்ளிட்டோர் காத்து இருந்தனர். மாநில அமைச்சரும், லோக்சபா எம்.பி.யும் கோர்ட் வளாகத்தில் 3 மணி நேரமாக காத்திருப்பதால் திமுகவினர் பலரும் கோர்ட் வளாகம் வெளியே குழுமி காத்திருக்கின்றனர். எனவே கோர்ட்டுக்கு வெளியே பரபரப்பாக இருந்தது. இதனிடையே, பின்னர் அவர்களை வெளியே போக அனுமதித்து 3.45 மணிக்கு திரும்ப வருமாறு கூறினார் நீதிபதி. நீதிமன்றம்அனுமதித்ததால் இருவரும் கிளம்பிச் சென்றுள்ளனர்.

வழக்கு விவரம்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூந்துறை கிராமத்தில் செயல்பட்டு வந்த செம்மண் குவாரிகளில் செம்மண் எடுக்க திமுக அமைச்சர் பொன்முடியின் உறவினர்கள் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பொன்மொடி குடும்பத்தினர் அங்கு செம்மண் எடுத்ததாக புகார் எழுந்திருந்தது. முறைகேடுகளால் தமிழக அரசுக்கு சுமார் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதை அரசு அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த வழக்கில்தான், பொன்முடி மற்றும் அவர் மகன் கவுதம சிகாமணி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications