Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென சிவி சண்முகம் வீட்டிற்கு வந்த நயினார் நாகேந்திரன்.. ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனை! காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டிவனத்தில் உள்ள அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சிவி சண்முகத்தில் வீட்டிற்கு சென்று சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடந்துள்ளது. இதனால் இந்த சந்திப்புக்கான பின்னணி என்ன என்பது தொடர்பாக விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், அடுத்த நாளே நயினார் நாகேந்திரனையும் டெல்லி பாஜக தலைமை அழைத்து ஆலோசனை நடத்தியது.

Nainar and CV Shanmugham meeting

இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியதை தொடர்ந்து, அண்ணாமலை அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பு நடத்தினார். ஆனால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வர முடியாது என்பதை டிடிவி தினகரன் திட்டவட்டமாக அறிவித்தார். அதேபோல் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற குரல் கொடுத்த செங்கோட்டையனை, அதிமுக எம்பி சிவி சண்முகம் கடுமையாக சாடினார்.

அதில் சிவி சண்முகம் பேசுகையில், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று சொல்கிறார்கள். கட்சிக்கு துரோகம் இழைத்ததற்காக நீக்கப்பட்டவர்கள் அவர்கள்.. அவர்களை இணைக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என்று செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்தார். இந்த நிலையில் திண்டிவனத்தில் உள்ள சிவி சண்முகத்தின் வீட்டிற்கு சென்று நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நயினார் நாகேந்திரன் மற்றும் சிவி சண்முகம் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பல்வேறு அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு பின் எடப்பாடி பழனிசாமிக்கு சிவி சண்முகம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.

டெல்லியில் பாஜக தலைவர்களை எடப்பாடி பழனிசாமி நெருங்குவதற்கு காரணமே சிவி சண்முகம் என்று பேசப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் டெல்லி முகமாகவே சிவி சண்முகம் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் சிவி சண்முகம் உடனான சந்திப்புக்கு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருச்சிக்கு சென்று கொண்டிருந்தேன்.

சிவி சண்முகம் எனது தம்பி.. நட்பின் அடிப்படையில் அவரை சந்தித்துள்ளேன். நாங்கள் ஒருதாய் பிள்ளைகள் தானே.. எந்தக் கட்சியிலும் இருந்தாலும் அவரை சந்திப்பேன்.. கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் சிவி சண்முகத்தை சந்திப்பேன். எங்கள் இருவருக்கும் இடையில் அரசியல் கிடையாது என்று தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அழைப்பு விடுத்தார். அந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் சிவி சண்முகத்தை சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் வடமாவட்டங்களில் பாஜக சில தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. சிவி சண்முகத்தின் ஆதரவு இருந்தால், கூடுதலாக சில தொகுதிகளில் பாஜகவினால் வெல்ல முடியும். இதன் காரணமாக தனது பழைய நட்பின் பெயரில் நயினார் நாகேந்திரன் சிவி சண்முகத்தை சந்தித்திருக்கலாம் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+