கத்தி எடுத்து என்னை கொலை செய்யுங்க!.. பிரஸ் மீட்டில் டென்ஷனான பாமக ஜிகே மணி
விழுப்புரம்: பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையேயான ஈகோ உச்சத்தில் உள்ளது. தைலாபுரத்தில் நடக்கும் பாமக ஆலோசனை கூட்டத்தை அன்புமணி புறக்கணித்துள்ளார். இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மணி செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாமக-வில் உள்கட்சி பூசல் வெடித்துக் கொண்டிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தைலாபுரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி உள்ளிட்ட பலர் புறக்கணித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக தைலாபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தை அன்புமணி இன்றும் புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் பாமக, வன்னியர் சங்கம் ஒரு வலிமையான அமைப்பு. அதன் வலிமையை மாமல்லபுரம் மாநாடு நிரூபித்து காட்டிவிட்டது. ஒரு கட்சி என்றால் சலசலப்பு, நெருக்கடி இருப்பது இயல்புதான். இது எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் எதையும் மறைத்து பேசவில்லை.
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. பாமக குடும்ப பாசத்தில் இருக்கும் கட்சி. இங்கு மிகப்பெரிய நெருக்கடியே ஏற்பட்டாலும் விரைவாக தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஐயாவிடம் நான் நேற்று இரவு வரை பேசினேன். அன்புமணியிடம் நேற்று இரவும் பேசினேன். இன்று காலையும் பேசினேன்.
என் ஆசை, நோக்கம் எல்லாம் ஒரு சுமூகமான தீர்வு விரைவில் வர வேண்டும் என்பதுதான். பாமகவின் வலிமையை மேலும் அதிகரித்து, வருகிற 2026 தேர்தலை வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்குண்டான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ஊடகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.
பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வந்தால் நாடு முழுவதும், கடல் கடந்தும் பார்க்கிறார்கள். ஊடகங்களை நாங்கள் மதிக்கிறோம். நெருக்கடியான சூழலில் அதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் நல்ல செய்திகளை வெளியிட வேண்டும். அதை மேலும் மேலும் பெரிதுப்படுத்தும் வகையில் செய்தி வருவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
தனிப்பட்ட ஒருவருக்கு எதிராக செய்தி வெளியிடுவது அவரை கொலை செய்வதற்கு சமமானது. நேற்று நான் பயந்து ஓடினேன் என்று கூறுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள ஊடக நண்பர்கள், எங்கள் கட்சியில் சுமூகமான சூழல் ஏற்பட ஆக்கபூர்வமான செய்திகளை வெளியிடுங்கள். பிரச்னையை பெரிதுப்படுத்த வேண்டாம்.
சுமூகமான பிரச்னை ஏற்பட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் வரப்போகிறது. ராமதாஸ், அன்புமணி இருவரும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். அந்த செய்தியும் வரத்தான் போகிறது. இது உள்கட்சி பிரச்னை. இதை ஊடகத்தில் பேசுவது நல்லதாக இருக்காது. இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்." என்றார்.
அப்போது ஒரு செய்தியாளர், "பிரச்னைக்கு நீங்களும் முக்கிய காரணம் என்கிறார்களே." என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜிகே மணி, "எப்படியெல்லாம் கேள்வி கேட்கறீர்கள். இது மோசமான கேள்வி. விஷத்தையோ, கத்தியையோ அவரிடம் கொடுங்கள். அவர் என்னை குத்தி கொலை செய்யட்டும். நான் சிறு உயிருக்கு கூட கெடுதல் விளைவிக்க மாட்டேன்.
45 வருடங்களாக நான் அரசியலில் இருக்கிறேன். நான் அயோக்கியன் என்று யாரையாவது மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள். நான் அப்படி செய்பவனா. அப்படியிருந்தால் நான் பாமகவில் இருந்திருக்கவே மாட்டேனே. எம்ஜிஆர், கலைஞர் காலத்தில் இருந்து எத்தனையோ வாய்ப்புகளை விட்டு இங்கிருக்கிறேன்." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications