ஐயா சொன்ன அந்த வார்த்தை.. அடுத்த திட்டம் இதுதான் – ஜி.கே. மணி கொடுத்த அப்டேட்
விழுப்புரம்: பாமக உள்கட்சி பூசல் தினசரி உச்சம் தொட்டு கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வாக்குவாதத்தை விட, பாமக சொந்தக் கட்சிக்குள் போடும் சண்டை பரப்பாகியுள்ளது. இந்நிலையில் இருவரையும் இணைக்கும் முயற்சியில் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே மணி ஈடுபட்டு வருகிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மேடையில் ஒலித்த கருத்து வேறுபாடு அடுத்தடுத்து பூதாகரமாக வெடித்து பாமகவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனி டிராக்கில் பயணித்து வருகிறார்கள்.

ராமதாஸ் கூட்டங்களை அன்புமணி புறக்கணித்து வந்தார். அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். தற்போது இருவரும் தங்களுக்கு தகுந்த வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளை மாற்றம் செய்து வருகிறார்கள். இது அந்தக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸிடம் அந்தக் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்தப் பிரச்னைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில், மூத்த நிர்வாகி ஜி.கே மணி மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. "கட்சியில் நிலவும் பிரச்னைக்கு நான் காரணமா. இந்தப் பிரச்னையால் கண்ணீர் விட்டு அழுதேன். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்." என ஜி.கே மணி கூறியிருந்தார்.
இந்நிலையில் தைலாபுரத்தில் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐயா ராமதாஸ் இப்போதுதான் கொஞ்சம் மனம் இறங்கியுள்ளார். சரி பார்க்கலாம் என்ற நிலைமைக்கு வந்துள்ளார். அதேபோல அவரிடமும் பேசி விரைவில் நல்ல நிலைமையை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். பிரச்னை முடிவுக்கு வந்தால் மட்டுமே எங்களுக்கு எதிர்காலம் உள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றம் குறித்து, இன்றைக்கு கூட வேண்டாம் என ராமதாஸ் ஐயாவிடம் கூறியுள்ளேன். உள்ளே நடக்கும், உள்ளே பேசும் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது. அன்புமணியிடம் பேசுகிறோம் என்று நாங்கள் கூறியதற்கு, 'அது உங்கள் விருப்பம்' என ராமதாஸ் கூறிவிட்டார்.
அடுத்தக்கட்டம் குறித்தும் நிறைய செய்திகள் வெளியில் சொல்ல முடியாது. தொடர்ந்து இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி முயற்சி எடுத்துக் கொண்டே இருப்போம். எங்களின் முயற்சி வெற்றியடையும் என்று நம்புகிறோம். இன்றைக்கு உள்ள சூழல் வேதனையாகவும், வருத்தமாகவும், மனதுக்கு கஷ்டமாகவும் உள்ளது. இந்த சூழல் இனியும் தொடரக் கூடாது என்று நினைக்கிறோம்.
எங்களின் மன வருத்தம் குறித்து உங்களுக்கும் தெரியும். ஒரு தனித்துவமான, பலமான அரசியல் கட்சி இந்த நிலைமைக்கு சென்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். நான் மட்டுமல்ல, எங்கள் இயக்கத்தில் உள்ள அனைத்து தொண்டர்களுமே வேதனையில் உள்ளனர். அந்த வேதனையை போக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கிறார்கள். அதற்கான முயற்சி தொடரும்.
கட்சி, அதிகாரம் ஆகியவற்றை பற்றியெல்லாம் பேச வேண்டிய நேரம் இது அல்ல. அதைப்பற்றி எல்லாம் பேசவும் நான் விரும்பவில்லை. இரண்டு பேரும் அமர்ந்து பேசினாலே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து, சமாதானம் ஆகிவிடுவார்கள். அது மட்டும் தான் இப்போது முக்கியம். மற்றவை எல்லாம் அதற்கு அடுத்துதான்." என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications