த*கொலை செய்து கொள்வேன்! பாமக பிரச்னைக்கு நான் காரணமா? முகம்முழுக்க சோகத்தோடு ஜிகே மணி சொன்ன வார்த்தை
விழுப்புரம்: பாமக நிலைமை சரியாகவில்லை என்றால் குடும்பத்துடன் தலைமறைவாவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் என்று கவுரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் சந்திக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று கூறிய அவர், பாமகவில் நடக்கும் விஷயங்களுக்கு நான் காரணமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதாக அறிவிக்க, மீண்டும் அன்புமணி அவர்கள் கட்சியில் அதே பொறுப்பில் தொடர்வாக அறிவித்து வருகிறார். அதேபோல் ராமதாஸ் கொள்கையை கையில் எடுத்து கட்சியை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர அன்புமணி ஆயத்தமாகி வருவதாக பார்க்கப்படுகிறது.

ஜிகே மணி பேட்டி
இதனிடையே ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலுக்கு பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி காரணமாக இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க ஜிகே மணி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஜிகே மணி பேசுகையில், பாமகவில் நெருக்கடியான காலச்சூழல் ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு இது சோதனையான காலகட்டம்.
வேதனை
எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல கூடிய நிலைமையில் நாங்கள் இல்லை. 45 ஆண்டுகளாக ராமதாஸ் உடன் இருக்கிறோம். அதன்பின் அன்புமணியுடன் பயணித்து வருகிறோம். எங்களின் விருப்பமும் ஆசையும் இருவரும் ஒன்றாக இணைந்து பாமகவை கொண்டு செல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது.
சந்திப்பார்களா?
ராமதாஸ், அன்புமணி எப்போது சந்திப்பார்கள் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திக்கும் போது கூட, அவரை சந்திக்க வேண்டாம் என்று கூறினேன். பாமகவில் உண்மையாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். சுமூகமான சூழல் இதுவரை ஏற்படவில்லை. சில ஊடகங்களில் ஜிகே மணி தான் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதலுக்கு காரணம் என்று சொல்கிறார்கள்.
கண்ணீர்விட்டு அழுதேன்
நான் அப்படிப்பட்ட மனிதன் கிடையாது. பதவிக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டால், எப்போதோ போயிருப்பேன். இவ்வளவு நேரம் அந்த செய்தியால் கண்ணீர்விட்டு அழுதேன். தூங்கி எழுந்த பின், ராமதாஸ், குடும்பம் மற்றும் கட்சியை மட்டுமே நினைப்பேன். என் உழைப்பை பற்றி ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கும் நன்றாக தெரியும். பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றிய பாமக சிதற வேண்டும் என்று நினைப்பேனா?
ராமதாஸிடம் வற்புறுத்தினேன்
பாமகவில் பொறுப்பாளர்களை மாற்றக் கூடாது என்று நேற்று வரை ராமதாஸ் உடன் பேசி கொண்டே இருந்தேன். ஜிகே மணியின் ஆழமான மனதின் ஆசையே, இருவரும் சந்திக்க வேண்டும் என்பதே.. சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். உட்கட்சி பிரச்சனையில் வெளியில் சொல்ல முடியாது. பொருளாளர் திலகபாமா குறித்து நான் எந்த புகாரும் அளிக்கவில்லை.
தற்கொலை அல்லது தலைமறைவு
ராமதாஸ் மனதில் உள்ள வேதனையை என்னிடம் கூறி வருகிறார். பாமகவில் நிகழக் கூடாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாமக கட்சியின் நிலைமை சரியாகவில்லை என்றால் 2 முடிவுகளை எடுத்துள்ளேன். ஒன்று குடும்பத்தோடு தலைமறைவாவது, இன்னொன்று தற்கொலை செய்து கொள்வது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications