தருமபுரி போச்சு.. விக்கிரவாண்டியில் அதோ கதி! ஒட்டுமொத்த குடும்பத்தை இறக்கிய ராமதாஸ்! ஆனால்..ரிசல்ட்?
விழுப்புரம்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கிறது. திமுக வேட்பாளர் அன்னையர் சிவா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாமகவின் தேர்தல் வியூகங்கள் இந்த தேர்தலில் படுதோல்வியை தந்திருக்கிறது. குறிப்பாக ஒட்டுமொத்த குடும்பத்தையே தேர்தலில் களம் இறக்கிய பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் ஆளாக வேட்பாளரை களம் இறக்கிய திமுக பிரச்சாரத்தை முன்னதாகவே தொடங்கியது.

அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்தது. இதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டபோது, விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கிய சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் அந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போதே சுமார் 40,000 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுகவும் தேர்தலை புறக்கணித்து இருப்பதால் வன்னியர் சமூக வாக்குகளும் அதிமுக வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பாமக களம் இறங்கியது.
ஆனால் தேர்தல் முடிவுகள் பாமகவுக்கு பாதகமாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தலில் பாமகவின் யூகங்கள் தவிடு பொடியாக இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள். குறிப்பாக ஒட்டுமொத்த குடும்பத்தையே விக்கிரவாண்டி தொகுதியில் களம் இறக்கினார் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ். தர்மபுரி தேர்தலை போலவே விக்கிரவாண்டி தொகுதி தேர்தலும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தர்மபுரி மக்களவை தேர்தலில் இதுவரை அரசியலில் பரிட்சயம் இல்லாத சௌமியா அன்புமணி களமிறங்கினார். அவருக்கு ஆதரவாக அவரது கணவர் அன்புமணி ராமதாஸ், மகள்கள் சங்கமித்ரா உள்ளிட்ட பலர் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் அதே பாணியை பின்பற்றி விக்கிரவாண்டி தொகுதியிலும் ஒட்டு மொத்த குடும்பமும் களமிறங்கி பிரச்சாரம் மேற்கொண்டது.
அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, சங்கமித்ரா அன்புமணி ஆகியோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அன்புமணி ராமதாஸும், சங்கமித்ரா அன்புமணியும் வாக்கு சேகரித்தனர். சங்கமித்ரா அன்புமணியின் பிரசாரம் தேர்தலில் கவனத்தை பெற்றது. தேர்ந்த அரசியல்வாதி போல அவர் பிரச்சாரம் மேற்கொள்வதாக பாமகவினர் கூறி வந்தனர். இதனால் அவருக்கு கட்சியில் விரைவில் பதவி கொடுக்கப்படலாம் எனவும் பேச்சு எழுந்தது.
மேலும் வன்னியர் இட ஒதுக்கீடு, மதுவிலக்கு உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து பாமகவின் பிரசாரம் இருந்தது. இருந்த போதும் பாமகவுக்கு இந்த தேர்தலிலும் தோல்வியே கிடைத்திருக்கிறது. அதிமுக வாக்குகளும் திமுகவுக்கு சென்றிருப்பதாக கூறுகின்றனர். இதன் காரணமாக ராமதாஸின் குடும்ப அரசியல் வியூகம் பொய்த்துப் போய்விட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். மேலும் இந்த தோல்வியின் மூலம் சட்டமன்ற தேர்தல் கூட்டணிகளும் பிரச்சனை என வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications