செப்டிக் டேங்கில் மிதந்த குழந்தை! விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் என்ன நடந்தது? மக்கள் குற்றச்சாட்டு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் செப்டிக் டேங்க்கில் விழுந்து மூன்றரை வயது குழந்தை பலியாகி உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக கூறி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் காலை 11 மணிக்கு குழந்தை துருப்பிடித்த மூடியின் காரணமாக செப்டிக் டேங்கிற்குள் விழுந்ததாகவும், மாலை 3 மணிக்கு தான் பள்ளி நிர்வாகம் குழந்தையை தேட தொடங்கியது தான் பலிக்கு காரணம். குழந்தை செப்டிக் டேங்கில் மிதந்துள்ளது என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவா திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையம் உள்ளது. இங்கு ஒப்பந்த பணியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் சிவசங்கரி.

இந்த பழனிவேல் - சிவசங்கரி தம்பதிக்கு மூன்றரை வயதில் லியா லட்சுமி என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தை விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளது.
இன்று காலையில் குழந்தையை பள்ளிக்கு சென்றது. அதன்பிறகு கழிவறைக்கு சென்ற குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்து பலியானது. செப்டிக் டேங்க் மீது போடப்பட்டு இருந்த இரும்பு மூடி துருப்பிடித்து சேதமாகி இருந்துள்ளது. அதில் குழந்தை மிதித்ததால் செப்டிக் டேங்கிற்குள் விழுந்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டவுடன் குழந்தையின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பிற குழந்தைகளின் பெற்றோர்கள் இணைந்து பள்ளி வாயில் முன்பாக விழுப்புரம் - சென்னை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போராட்டடத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கூறுகையில், ‛‛செப்டிக் டேங்கை சரியாக பராமரிக்கவில்லை. அதனை அப்படியே போட்டு வைத்துள்ளனர். இடைவேளை விட்ட பிறகு மீண்டும் குழந்தைகள் அனைவரும் வந்துள்ளார்களா? என்பதை செக் செய்ய வேண்டும். ஏன் செக் செய்யவில்லை? செக் செய்யாமல் இருந்ததால் தான் அந்த குழந்தையின் உயிரே போய்விட்டது'' என்று கூறினார்.
அதேபோல் இன்னொரு பெண் கூறுகையில், ‛‛காலை 11 மணிக்கு குழந்தை டேங்கிற்குள் விழுந்துள்ளது. அதுபற்றி யாரிடமும் கூறவில்லை. மாலையில் 3 மணிக்குள் பள்ளி விடும்போது தான் குழந்தையை தேடிஉள்ளனர். குழந்தை மிதக்கிறது என்று மேலே இருந்து யாரோ ஒரு சார் பார்த்து சொல்லியிருக்கிறார். அதன்பிறகு தான் குழந்தை உடலை மீட்டுள்ளனர். எந்த அளவுக்கு பள்ளி நிர்வாகம் நடக்கிறது என்று பாருங்க.. ஒரு குழந்தை பாத்ரூம் சென்றால் ஆயாம்மா உடன் செல்ல வேண்டுமா இல்லையா?'' என்று கோபத்தை வெளிக்காட்டி உள்ளார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண் ஒருவர் கூறுகையில், ‛‛பாத்ரூம் டேங்கில் துருப்பிடித்து மக்கிப்போய் உள்ளது. அதன்மேல் பேப்பர் போட்டு மூடியுள்ளனர். பள்ளிக்குள் சென்று நானே அதனை பார்த்தேன். அதில் குழந்தை ஏறிதான் உள்ளே விழுந்துள்ளது. குழந்தை 12.30 மணிக்கு விழுந்துள்ளது. ஆனால் 4 மணிக்கு தான் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். திறமையான நிர்வாகம் இல்லாததது தான் குழந்தை இறப்புக்கு காரணம். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்'' என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications