பிடிஆர் பெண் பத்திரிக்கையாளரிடம் பேசியது என்ன? குண்டை போட்டுவிட்டு.. சவால் விட்ட சிவி சண்முகம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் உள்ள பெண் பத்திரிக்கையாளரிடம் பேசியதாக வெளியான ஆடியோ பொய் என்றால், ஏன் இதுவரை அதுகுறித்து புகாரளிக்கவில்லை, என அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு காவல் துறை ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது.

ptr audio leaks : What did PTR palanivel thiagarajan spoke with delhi female journalist? CV Shanmugam

தமிழகத்தில் கொலை, கொள்ளை ,பாலியல் தொல்லை குறைந்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் பச்சை பொய்யை கூறிவருகிறார். எங்கே பார்த்தாலும் கூட்டு பாலியல், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26,27 ஆம் தேதி விழுப்புரத்திற்கு கள ஆய்விற்காக வந்த போது வடமாநிலத்தை சார்ந்த சிறுமியை 4 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதல்வர் வருகையின் போது நடைபெற்ற சம்பவத்தை காவல் துறையினர் மூடி மறைத்தனர். ஏன் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து வந்து தொழில் புரிவோருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் திமுக ஆட்சி இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கிற நிதி அமைச்சர் பிடி பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் உதயநிதி ஸ்டாலின் சபரீசன் 30 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை சேர்த்து வைத்துள்ளார்கள் என்றும் அதனை எதில் முதலீடு செய்ய வேண்டும் என புரியாமல் உள்ளதாகவும் பிடிஆர் பேசியதாக ஆடியோ உள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் சொன்னால் அரசியலுக்காக சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். ஆளும் கட்சி அமைச்சரே இப்படி கூறியிருப்பதாக ஆடியோ பரவுகிறது.

ptr audio leaks : What did PTR palanivel thiagarajan spoke with delhi female journalist? CV Shanmugam

கொள்ளை அடித்த பணம் குறித்த ஆடியோ விவகாரம் குறித்து ஏன் இதுவரை முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த ஆடியோ வெளியிட்டவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை . ஆடியோ பொய் என்றால் வாய்ஸ் டெஸ்ட்டுக்கு தைரியமாக அனுப்பலாமே? கடந்தாண்டு மூலதன செலவு என்பது 36 ஆயிரம் கோடி தான். இவர்கள் கொள்ளை அடித்து இருப்பது 30 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் 2லட்சத்து 70 ஆயிரம் கோடியில் 30 ஆயிரம் கோடியை ஸ்டாலின் தலைமையிலான அரசு கொள்ளை அடித்துள்ளார்கள். மறைந்த முதல்வர் கருணாநிதியை கொள்ளையடிப்பதில் மிஞ்சி இருக்கிறார் ஸ்டாலின் என்று ஆடியோவில் இருக்கிறது.

திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் சட்டம் கொண்டு வந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ள நிலையில் 12 மணி நேரமாக மாற்றும் அரசாக இந்த திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளபோது அவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்பதாகவும், தெரிவித்தார்கள்.

ஜி ஸ்கொயரில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்து முறையாக விசாரனை செய்ய வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்து வருகிறது. திமுக அரசு கோமாளி அரசாக செயல்பட்டு வருகிறது. சட்டம் போட வேண்டியது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே பின்வாங்குவதை தான் ஸ்டாலின் அரசு கொண்டுள்ளது" இவ்வாறு சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+