அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்.. பணம் கொடுத்து நிர்வாகிகளை வளைத்துவிட்டார்.. ராமதாஸ் குற்றச்சாட்டு
விழுப்புரம்: என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் சொல்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை என்று கூறிய அவர், பாமகவை பறிக்கச் சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பாமகவில் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து எனக்கு எதிராக நிர்வாகிகளை செயல்படத் தூண்டுவதாகக் கூறிய அவர், எங்கள் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறை வைத்தோம் என்று கூறி இருக்கிறார்.
பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை நாளை மறுநாள் அன்புமணி கூட்டி இருக்கிறார். இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இந்த நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் சொல்கிறார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை.. நான் கதவை அடைக்கவும் இல்லை.

பாமகவை பறிக்க அன்புமணி சூழ்ச்சி செய்து வருகிறார். பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தைக் கொடுத்து எனக்கு எதிராக செயல்படத் தூண்டிவிடுகிறார் அன்புமணி. ஐயா, ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணி தான். அதுமட்டுமல்லாமல் பேச்சுவார்த்தைக்கு நான் வர மறுப்பதாக அன்புமணி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.
ஆனால் பாமகவின் 34 அமைப்புகளின் நிர்வாகிகளையும் பணம் கொடுத்து அன்புமணி வளைத்துவிட்டார். பணம் கொடுத்து சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி தவறாக எழுத சொல்கிறார். எதிரிகள் கூட என்னைப் பற்றி இவ்வளவு கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை. ஆனால் பொதுவெளியில் அன்புமணி என்னைப் பற்றி விமர்சிக்காமல் நாடகம் போடுகிறார்.
பாமகவுக்கு மீண்டும் அங்கீகாரம் பெறும் நோக்கில்தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். ஆனால் பாமகவுக்கு நான் தலைமை ஏற்கக் கூடாது என்று அன்புமணி சொல்கிறார். கூட்டணி முடிவால் அன்புமணியுடன் பிரச்சனை தொடங்கியது. வேட்பாளர், கூட்டணியை நான்தான் முடிவு செய்வேன் என்றதால், அன்புமணி பிரச்சனை செய்து வருகிறார்.
அதுதான் பிரச்சனைக்குக் காரணம். பாமகவை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு நான் டம்மியாக தைலாபுரத்தில் இருக்க முடியாது. எங்கள் பிள்ளை அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்.. நல்ல பள்ளியில் படிக்க வைத்து, மத்திய அமைச்சராக்கி பொறுப்புகளை ஒப்படைத்தேன். ஆனால் கட்சியின் வளர்ச்சிக்காக இதுவரை அன்புமணி எதையும் செய்யவில்லை.
அதனால் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுப் பிழைத்துக் கொள்ள அன்புமணி தயாராக வேண்டும். என் வியர்வையில் பாமக ஆலமரமாக வளர்ந்துள்ளது. கடுமையாக உழைத்து தண்ணீருக்கு பதில் வியர்வையை ஊற்றி கட்சியை ஒரு ஆலமரமாக வளர்த்தேன். ஆலமரக் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயல்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications