"அன்புமணி செய்த தவறுகள்.." பேசவே முடியாமல் நா தழுதழுத்த ராமதாஸ்.. கலங்கிப்போன ஐயா!
விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது சில இடங்களில் கண் கலங்கிய ராமதாஸ், எமோஷ்னல் ஆகி பேச முடியாமல் தழுதழுத்து பேசியதையும் பார்க்க முடிந்தது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் தற்போது கட்சி தலைவராக இருக்கும் அன்புமணிக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் பொது மேடைகளிலும் கூட இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது.

ராமதாஸ் vs அன்புமணி
கடந்த டிசம்பர் மாத இறுதியில் பட்டானூரில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் மேடையில் ராமதாஸ் பேசும்போதே குறுக்கிட்டு பேசியிருந்தார் அன்புமணி. அந்த கூட்டத்தில் ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தனை கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். அதற்கு தான் அன்புமணி வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு மாறி மாறி இரு தரப்பும் விமர்சிக்கும் வகையிலான கருத்துகளையே கூறி வந்தனர். இந்தச் சூழலில் தான் விழுப்புரம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது மகன் அன்புமணி மீதே சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தர்மபுரியில் நடந்த ஒரு கூடட்த்தில் அன்புமணி எப்படி எல்லாம் பேசினார் என நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.. நானும் அதை பார்த்தேன்.. என்ன குற்றம் செய்தேன் ஏன் பதவி நீக்கம் என்றும் அன்புமணி பேசியிருந்தார். மக்களையும் கட்சியினரையும் திசைதிருப்பி அனுதாபம் பெற முயற்சி செய்துள்ளார். எனவே, அதற்கான விளக்கத்தை கொடுப்பது எனது கடமை.
உடலுக்கு இனிப்பை தவிர்த்துவிட்டு சில கசப்பான மாத்திரைகளை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அன்புமணி செய்தது தவறு இல்லை.. சத்தியத்தை மீறி அன்புமணியை 35 வயதில் மீறி மத்திய அமைச்சராக ஆக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். இப்போது அவரே என்னை குற்றவாளியாக காட்டி மக்களிடமும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் முயல்கிறார்" என கூறினார். மேலும், அன்புமணி மீது அவர் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
மேடை நாகரீகம் கூட இல்லை
புத்தாண்டு பொதுக்கூட்டத்தில் மேடை நாகரீகம் கடைபிடிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என அன்புமணி நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினார். அப்போது மேடையில் அன்புமணி நடந்து கொண்டது தவறு என்றும் மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக வீசி, நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தவர் அவர் தான் என விமர்சித்தார்.
கண் கலங்கி எமோஷ்னலானார்
தனது மகன் மீதே ராமதாஸ் இதுபோல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அதேநேரம் அன்புமணி குறித்து பேசும்போது ராமதாஸ் பல இடங்களில் கண் கலங்கினார்.
குறிப்பாக அன்புமணி பொய் சொன்னதாகவும் இதனால் மாவட்ட செயலாளர்கள் 100 பேர் தனது ஆலோசனை கூட்டத்திற்கு வரவில்லை என குறிப்பிட்ட அவர், அப்போதே தான் செத்துவிட்டதாக குறிப்பிட்டார். இதை ராமதாஸ் கூறும்போது ரொம்பவே எமோஷ்னல் ஆனார். இதுபோல சில இடங்களில் அன்புமணி குறித்து பேசும்போதே நா தழுதழுத்து போனார்.












Click it and Unblock the Notifications