சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் தனித்து போட்டியிட மாட்டார்.. யாருடன் கூட்டணி? நேரடியாக சொன்ன ஜிகே மணி!
விழுப்புரம்: சட்டசபைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறிய ஜிகே மணி, யாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதை வெளியில் சொல்வது சரியாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் காரணமாக, இரு தரப்பும் தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது. ஏற்கனவே அன்புமணி தரப்பு பாமக அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. அதிமுக - பாமக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அன்புமணி தரப்பு பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மறுபக்கம் ராமதாஸ் தரப்பு பாமகவினர் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்புதல் இன்றி ராமதாஸ் உடனான கூட்டணியை இறுதி செய்ய முடியாது என்று ஸ்டாலின் கையை விரித்துவிட்டார்.
இதனால் திருமாவளவனை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்தது. ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துவிட்டார். பாமக எம்எல்ஏ அருள், ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன் என்று கூறிய பின்னரும், அவர் இறங்கி வரவில்லை. அதேபோல் திமுகவுடன் விசிகவின் முக்கியத்துவத்தை அறிந்து அவர்களுடன் இணக்கமாக உள்ளது.
இதனால் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. என்டிஏ கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதில் அன்புமணி பிடிவாதமாக உள்ளார். இதனால் அதிமுக தரப்பில் ராமதாஸ் தரப்புடன் பேசவில்லை. பாஜக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் தவெக கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினருக்கு நேர்காணலை தைலாபுரத்தில் ராமதாஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்ரீகாந்த், ஜிகே மணி இருவரும் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்துப் போட்டியிட மாட்டார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. யாருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை வெளியில் சொல்ல முடியாது.
விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாமகவின் மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்படுமா அல்லது ராமதாஸ் தரப்புக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications