ஓட்டு வாங்குவதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. அதிமுகவை அட்டாக் செய்த ராமதாஸ்!
விழுப்புரம்: தேர்தலின் போது ஓட்டு வாங்குவதற்காக எந்த வாக்குறுதிகளை வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அதிமுக முதற்கட்ட வாக்குறுதிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். கூட்டணி தொடர்பான அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடுவேன் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளையொட்டி அதிமுகவின் முதற்கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 2021 சட்டசபைத் தேர்தல் வாக்குறுதியை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்டவை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இதனை திமுக, சீமான் உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், பாமக சார்பில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைக்கப்படும்.
கட்சியின் வளர்ச்சிப் பணிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுச்சியுடன் இருக்கிறது. இந்த சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட 4,109 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இது பாமக வரலாற்றில் காணாத நிகழ்வாகும். இது எங்கள் தரப்புக்கும் மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் நல்ல கூட்டணி என்று பாராட்டும் வகையில் நாங்கள் கூட்டணி அமைப்போம்.
ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம். கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலின் போது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மக்கள் தான் உண்மையான எஜமானார்கள். அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானிப்பார்கள்.
கூட்டணி குறித்த அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று நிர்வாகக் குழுவில் கேட்டுக் கொண்டனர். அதனால் கூட்டணி குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவை வெளியிடுவேன் என்று தெரிவித்தார். ஏற்கனவே அன்புமணி அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்துவிட்டார். இதனால் ராமதாஸ் தரப்பு யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவுடன் ஜிகே மணி, அருள் உள்ளிட்டோர் நெருக்கம் காட்டி வந்தாலும், விசிக தலைவர் திருமாவளவன் ஒப்புக்கொண்டால் மட்டுமே ராமதாஸ் தரப்பை ஏற்கும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதனால் இன்னும் சில வாரங்களில் ஸ்டாலின் - திருமாவளவன் இடையிலான சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications