1008 பேசுவாங்க.. ஆனா அவங்க வீட்டுல ஒழிக்க முடிஞ்சதா? சனாதன பஞ்சாயத்து.. ராமானுஜ ஜீயர் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சனாதனத்தை விமர்சிப்பவர்களின் வீடுகளில் அதை ஒழிக்க முடியவில்லையே என செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Ramanuja Jeyar criticizes those who talk about abolition of Sanatanam for not being able to change those who are at home

இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவின் அனைத்து தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயித்துள்ளார். மற்றொருபுறம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளது.

அப்படி இருக்கையில், செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் உதயநிதி குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற பிராமணர் சங்கத்தின் 43ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது "தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியுள்ள கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "சின்ன பசங்க ஆயிரத்தி எட்டு பேசிக்கொண்டிருப்பார்கள்.

இதை பேசும் அவர்கள் வீட்டிலேயே அதை ஒழிக்க வேண்டும். அதை செய்துள்ளார்களா? முடிந்ததா? அவர்களுடைய அம்மாவையே சனாதன தர்ம வழிபாட்டின் ஒரு நல்ல ஸ்திரீ என்று நாம் செல்லலாம். நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி, மெட்டி என எல்லாமே அவர்கள் அணிந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சனாதன தர்மத்தின் வழிக்காட்டிதான். இப்படியாக அம்மா பேச்சை கேட்காத பசங்களை நாம் எல்லோரும் திருத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+