Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு.. கிடுக்கிப்பிடி போட்ட ஜெயக்குமார்.. என்ன சொல்லப்போகிறார் பொன்முடி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? என்று பொன்முடிக்கு எதிராக செம்மண் முறைகேடு வழக்கில் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று பொன்முடி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டுவரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் முறைகேடாக செம்மண் குவாரியை ஏலம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த செம்மண் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக செம்மண்ணை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

Semman quarry case : Jeyakumar who was caught .. what is Ponmudi going to say

இது தொடர்பாக, பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 பேர் மீது 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு சாட்சிகள் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

அதில் ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன் உள்ளிட்ட 9 பேர், இவ்வழக்கு சம்பந்தமான கோப்புகளில் தங்களிடம் அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், தங்களுக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்று கூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் கடந்த 9ம் தேதி முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன் சார்பில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், திமுக ஆட்சியின் போது செம்மண் குவாரி முறைகேடு செய்தது தொடர்பாக அக்காலக்கட்டத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலவரங்களை கண்டறிந்து செம்மண் குவாரி முறைகேடு சம்பந்தமாக தெளிவான தகவல்களுடன் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சாட்சியங்களிடமும் உண்மையான வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. வழக்கில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் பிறழ் சாட்சியமாக மாறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். மேலும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிடவும் இந்திய பிரஜையான அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருவதுபோல் நான் இம்மனுவை தாக்கல் செய்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவிற்கு ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்ய மேலும் சில நாட்கள் கால அவகாசம் கேட்டனர். இதை ஏற்று கொண்ட மாவட்ட நீதிபதி பூர்ணிமா இறுதி அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை இன்று 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக அமைச்சர் பொன்முடியை விரட்டி வருகிறது செம்மண் முறைகேடு குவாரி வழக்கு. இன்றைய தினம் செம்மண் முறைகேடு வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்போகும் மனுவை பொறுத்து வாத விவாதங்கள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+