நீங்க கபாலியா இல்லை காவிக்கு பயந்தவரா? ஆளுநரிடம் என்ன பேசுனீங்க? ரஜினியை விளாசும் கேஎஸ்.அழகிரி
விழுப்புரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
Recommended Video
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் நடைப்பயணமாக 4 முனை சந்திப்பு வரை சென்றனர்.

கே.எஸ். அழகிரி
செல்லும் வழியில் இருந்த காந்தி சிலை மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "சுதந்திர தினத்தை பொதுவுடைமை, சோசிலியஸ்ட் கட்சிகள் கொண்டாடி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் மூன்றாவது முறையாகச் சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதை வரவேற்கிறோம்.

மறைக்கின்றனர்
அதேநேரம் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனக் கூறும் பாஜகவினர், அதன் வரலாற்றை மறைக்கிறது. சுதந்திரப் போராட்ட வரலாற்றை அவர்கள் திட்டமிட்டு மறைக்க முயல்வது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இவை எல்லாம் மக்களிடையே வேலை செய்யாது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு அடைந்த பின்னர் சாதிய கொடுமை ஆங்காக்கே இருக்கிறது.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலித் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே அவர் தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்று தடையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக முதல்வருக்குப் புகார் சென்ற உடனேயே இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், அண்ணாமலை தேவையில்லாமல் குறை சொல்ல வேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கிறார்..

ஆர்எஸ்எஸ்
சனாதனம் என்பது பழமையைப் பாதுகாப்பது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சனாதனத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். நாட்டில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வந்த கட்சி காங்கிரஸ் தான். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒருபோதும் இட ஒதுக்கீட்டை ஆதரித்தது இல்லை. இந்தியாவில் 5 ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த தீண்டாமையைக் காங்கிரஸ் வெறும் 100 ஆண்டுகளில் மாற்றிக் காட்டி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
போலீஸ் அதிகாரிகள் தவறு செய்தால் சர்வதிகாரியாக மாறுவேன் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் போராட்டம் என்ற பெயரில் சிலர் திட்டமிட்டு நடத்திய கலவரத்தில் பல பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக எடுத்தது. பிரதமர் தமிழகம் வந்த சமயத்தில் தமிழக அரசு பேனரில் மோடியின் படத்தை பாஜகவினர் ஒட்டியது ஏற்புடையது அல்ல..

ரஜினிகாந்த்
அதேபோல தமிழக ஆளுநர் கூறும் எல்லா கருத்துகளையும் நாங்கள் ஒன்றும் எதிர்ப்பதில்லை. அவர் கூறும் சில கருத்துகளை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உள்ளார். ஆளுநரிடம் அரசியல் பேசியதாக ரஜினி கூறுகிறார். ஆனால் என்ன பேசினோம் என கூற மறுக்கிறார். கபாலியா அல்லது காவிக்குப் பயந்துவிட்டாரா என்பதை ரஜினி தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

நீட் விலக்கு
தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நீட் தேர்வை வேண்டாம் என்று தான் கூறி வருகிறோம். அரசுப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பின் நீட் தேர்வு நடத்தினால் நாங்கள் ஏற்போம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications