ஓபிஎஸ்-இபிஎஸ் இணைய வாய்ப்பா? அமித் ஷாவை ‘அவங்க’ போய் பார்த்தாங்களே! படக்கென பேசிய சிவி சண்முகம்!
விழுப்புரம் : இன்றைக்கு தமிழகத்தில் செயல்படாத அரசு ஆக செயல்பட்டு தன் குடும்பத்திற்கு மட்டுமே சொத்து சேர்த்து வரும் அரசாக செயல்பட்டு வருவது தான் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு என அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக தலைமைச் கட்சி அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி வி சண்முகம் செய்தியாளரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்," முதலமைச்சர் தலைமையேற்று செயல்பட்டு இருக்கும் இந்த மு க ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஒன்றை ஆண்டுகளாக இந்த அரசு செயல்படாத அரசாங்க இருந்து கொண்டிருக்கிறது. மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை.

சிவி சண்முகம்
தேர்தலில் வாக்குறுதி அளித்ததை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களுடைய ஒரே நோக்கம் திரு ஸ்டாலின் அவருடைய குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதை கொள்கையாக கொண்டு இருப்போம் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அம்மா கொண்டு வந்த அரசு கேபிளை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் அரசியல் என்ன நடப்பது என்று தெரியாத ஒரு முதலமைச்சராக ஒரு கையாளாகாத முதலமைச்சராக செயல்பட்டு இருப்பது தான் மு க ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்
அதேபோல் திமுக கட்சியில் அமைச்சர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதுவும் தெரியாத முதலமைச்சராக அவர் இருக்கின்றார். மேலும் டாஸ்மாக் மூலம் அதிக விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது. ஆனால் வருமானம் குறைவாக வருவதாகவும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இது தெரியாத அரசாக இந்த அரசு செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. மேலும் திறமை இல்லாத முதலமைச்சராக நாடகம் ஆடிக்கொண்டு தமிழக மக்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாத ஒரு முதலமைச்சர் ஆக செயல்பட்டு வருகிறார்

மெத்தனப் போக்கு
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி விவகாரத்தில் போலீசார் உடைய மெத்தனப் போக்கும் உளவுத்துறை போலீசாரின் கையாளாததனமே காரணம். பிரபல செய்தித்தாளில் உளவுத்துறை மூலமாக கலவரத்தின் பொழுது பசு மாட்டின் காம்பை அறுத்ததாக இரண்டு சமுதாயத்தை, கலவரத்தினால் பள்ளியை சேதப்படுத்தியதாகவும் இந்த தமிழக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கையாள தனத்தை வெளிப்படுத்தும் விதமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் - இபிஎஸ்
இதேபோல் மத்திய அரசு முன்கூட்டியே கோவை வெடிகுண்டு சம்பவத்தில் தகவல் கொடுத்துள்ளது. உளவுத்துறை மெத்தனமாக செயல்பட்டு வருகின்ற நிலைமைதான் தற்பொழுது இந்த அரசின் சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு காரணம். ஆனால் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக காவல்துறைக்கு பாராட்டு சான்றுகள் வழங்குகின்றன. ஓபிஎஸ்இபிஎஸ் இணைய வாய்ப்பு இருக்குமா என கேட்கிறார்கள். அமித் ஷாவை கூட தான் கனிமொழி அவர்கள் சந்தித்து பேசினார் அதனால் பாஜகவுடன் திமுக கூட்டணி வர வாய்ப்பா?" என பேசினார்.












Click it and Unblock the Notifications