திண்டிவனம் தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்க கடும் போட்டி.. கள நிலவரம் என்ன?
விழுப்புரம்: திமுக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தையும் திண்டிவனத்தை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. மறுபுறம் திமுகவினரும் இந்த தொகுதி கண்டிப்பாக தங்களுக்கே கிடைக்கும் என்று நம்புகிறார்கள். கடந்த முறையே போட்டி கடுமையாக இருந்தது. இந்த முறை எப்படியும் வெல்லலாம் என்ற முனைப்பில் திமுக இருக்கிறது. அங்கு யார் யார் போட்டியில் உள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பெறும் முனைப்பில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக உள்ளார்கள். கட்சி தலைமைகள் யாருக்கு செல்வாக்கு உள்ளது. யாருக்கு சீட் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதை சர்வே எடுக்கின்றன. அதன்பிறகே வாய்ப்புள்ளவர்களிடம் விருப்ப மனு வாங்கி, அவர்களில் ஒருவரை தேர்வு செய்கின்றன. அப்படி வாய்ப்பு உள்ளவர்களுக்கு இடையே கூட கடுமையான போட்டிகள் நிலவுகிறது.

ஆளும் கட்சியான திமுக சார்பிலும் சரி, எதிர்க்கட்சியான அதிமுக சார்பிலும் சரி போட்டி போட வேட்பாளர்கள் அதிக அளவில் ஆர்வமாக உள்ளன. திமுகவை பொறுத்தவரை போட்டி கடுமையாக உள்ளது. எப்படியும் ஜெயித்துவிடலாம் என்று போட்டியிட பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, மறுபக்கம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதலே விருப்ப மனு விநியோகித்தும் வருகிறது.
திமுகவில் போட்டி
ஏராளமான திமுகவினர் ஆர்வமாக விருப்பமனுக்களை பெற்றுள்ளார்கள். அதில் பலர், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்காக மனுக்களை பெற்று திருப்பி வழங்கி வருகின்றனர். அதேநேரம் விருப்ப மனு தலைவர்கள் பெயரில் வாங்கப்பட்டாலும், தொகுதிகளுக்கும் வாங்குவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். இதில் கட்சி தலைமை யாருக்கு சீட் தரப்போகிறது என்பது தான் இப்போது ட்விஸ்ட்டாக இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுக சார்பில் யார் யார் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தகவல்கள் மற்றும் உள்ளூர் கள நிலவரம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றது. அந்த வகையில் இப்போது திண்டிவனம் (தனி) தொகுதி பற்ற பார்ப்போம்.
திண்டிவனம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான சட்டமன்றத் தொகுதி திண்டிவனம் (தனி). பட்டியல் இனத்தவருக்காக (SC) ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (GST Road) அமைந்துள்ளதால், இது வட தமிழ்நாட்டின் ஒரு முக்கிய போக்குவரத்து மற்றும் வணிக மையமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. அர்ஜுனன் என்பவர் சுமார் 97,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட சீதாபதி சொக்கலிங்கம் வாக்குகள் வாங்கியிருந்தார். சுமார் 9,700 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது.
2021 நிலவரம் என்ன
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாமக ஆதரவுடன் அதிமுக களம் இறங்கி இருந்தது. இதனால் அங்கு அதிமுக கடும் சவாலுக்கு பிறகு வெற்றி பெற்றது. இந்த முறை பாமக (அன்புமணி அணி) அதிமுக ஆதரவுடன் போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் பி. அர்ஜுனன் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விசிக குறிவைத்துள்ளது
அதேநேரம் திமுக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தையும் திண்டிவனத்தை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. மறுபுறம் திமுகவினரும் இந்த தொகுதி கண்டிப்பாக தங்களுக்கே கிடைக்கும் என்று நம்புகிறார்கள். கடந்த முறையே போட்டி கடுமையாக இருந்தது. இந்த முறை எப்படியும் வெல்லலாம் என்ற முனைப்பில் திமுக இருக்கிறது.
சீதாபதி சொக்கலிங்கம்
திமுகவை பொறுததவரை திண்டிவனம் தொகுதியில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சீதாபதி சொக்கலிங்கத்திற்கு, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர் அர்ஜூனனிடம் சுமார் 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 75 வயதான இவர், விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருக்கிறார் கடந்த 2021-ம் தேர்தலில் தோல்வியுற்றதனாலும் வயது மூப்பின் காரணத்தாலும் தனது மகன் செந்தில் முருகனுக்கு சீட்டு கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரம் இந்த முறை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளரான கோ. அய்யனார் ரேஸில் இருக்கிறாராம். சட்டப்படிப்பில் முதுநிலை படிப்பை முடித்து 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிவரும் 51 வயதான கோ.அய்யனார், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர் ஆவார். திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி ஏற்கனவே பல முறை முயற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் எப்படியாவது திண்டிவனம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு பணியில் ஈடுபட்டு வருகிறாராம்.
ரவிக்குமார்
அதேபோல் ரவிக்குமார் (58 வயது) விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வசித்து வருகிறார் .இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட பிரதிநிதி, பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி சேர்மன் மற்றும் மாவட்டக் கழக துணை செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவரும் போட்டியில் இருக்கிறார். இதுதவிர 45 வயதாகும் பழன திராவிட முன்னேற்றக் கழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார் மேலும் கிளைக் கழக செயலாளர், தற்போது மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இருந்து வருகிறார். இவரும் போட்டியில் இருக்கிறார். இந்த மூன்று பேரில் அய்யனார் மற்றும் சீதாபதி சொக்கலிங்கம் இடையே போட்டி அதிகமாக உள்ளதாம்.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications