விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீசார் வைத்திருந்த இ செலான் கருவி.. நொடிப்பொழுதில் ஆட்டையை போட்ட மர்ம நபர்கள்..பரபரத்த விழுப்புரம்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள மது விலக்கு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் போலீசாரிடம் இருந்த இ செலான் கருவியை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து அபராதம் போடுவதற்காக தமிழகம் முழுவதும் அவ்வபோது போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பிடித்து ஸ்பாட்டிலேயே பைன் அடிக்கும் நடைமுறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது.

இன்னைக்கு ஒரு பிடி.. உலகின் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகள்.. இந்தியா 5வது.. பெஸ்ட் எந்த நாடு தெரியுமா இன்னைக்கு ஒரு பிடி.. உலகின் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகள்.. இந்தியா 5வது.. பெஸ்ட் எந்த நாடு தெரியுமா

போக்குவரத்து விதிமீறலில்..

போக்குவரத்து விதிமீறலில்..

தற்போது புதிய வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் அபராதம் என பலமடங்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் சில இடங்களில் அபராதம் விதிக்கும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது.

போலீசார் மறித்தாலும்..

போலீசார் மறித்தாலும்..

சில நேரம் போலீசார் நிற்பதை பார்த்து தலை தெறிக்க திரும்பி ஓடும் காட்சிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலை பயன்படுத்தி போலீசார் மறித்தாலும் கூட சில நேரங்களில் நிற்காமல் தப்பி ஓடுகின்றனர். பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் இப்படி விதிகளை மீறிசெல்வதைக் காண முடியும். சில நேரங்களில் போக்குவரத்து போலீசாரை சில நபர்கள் போதையில் வந்து அடித்த சம்பவமும் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளது.

இ செலான் கருவியை பிடுங்கிக் கொண்டு

இ செலான் கருவியை பிடுங்கிக் கொண்டு

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் போலீசாரிடம் இருந்த இ செலான் கருவியை ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள மது விலக்கு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தலைக்கவசம் அணிந்த படி வாகனத்தில் வந்த இருவர் இ செலான் கருவியை பிடுங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா இரு போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரிடமே வழிப்பறி நடந்தது போல இ செலான் கருவியை மர்ம நபர்கள் பறித்துசென்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

English summary
Villupuram district Klianur police station police were engaged in checking vehicles at the alcohol exemption check post in the area. At that time, two people wearing helmets on a motorcycle took away the e challan device from the police, which caused a sensation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X