Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ம கண்ட காட்சி உண்மை தானா? தென்பெண்ணை ஆற்றில் உருண்டு விளையாண்ட உருவம்! வியந்த விழுப்புரம்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள எல்லிச்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் வித்தியாசமான காட்சி ஒன்றைக் கண்டு மக்கள் வியந்தனர். தென்பெண்ணை ஆற்றில் நீர் நாய் ஒன்று துள்ளி விளையாடி, மீனை பிடித்து உட்கொண்ட காட்சிகள் அப்பகுதி மக்களுக்கு விருந்தாக அமைந்தது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவண்ணாமலை அருகிலுள்ள சாத்தனூர் அணையில் நீர் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் அணையிலிருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் எல்லிச்சத்திரம் அணைக்கட்டு பகுதிகளில் கரைகளை கடந்தும் ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளநீர் செல்வதை கிராம மக்கள் பார்வையிட்டு, சிலர் செல்பி எடுத்து கொண்டுள்ளனர்.

Villupuram Thenpennai River River otter

தென்பெண்ணை ஆறு

இந்த நிலையில், எல்லிச்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் நீர் நாய் துள்ளி விளையாடி மட்டுமின்றி, நீரில் மூழ்கி மீனை பிடித்து உட்கொண்டது, அங்கே இருந்தவர்களுக்கு ஆச்சர்யமான காட்சியாக அமைந்தது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் நாய்கள் தென்படுவது அதிகரித்துள்ளது. அதிகம் மக்களால் அறியப்படாத நன்னீர் நாய்கள் தமிழகத்தின் சில ஆறுகளில் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தான் நீர் நாய்கள் அதிக அளவு தென்பட்டன.

நீர்நாய்

இந்த நிலையில் நீர் மாசு காரணமாக வட மாவட்டங்களில் இருக்கும் ஆறுகளில் நீர்நாய் தென்படுவது முற்றிலும் மறைந்து விட்டது. இந்த நிலையில் தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு வட மாவட்டத்தில் குறிப்பாக தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் நீர் நாய்கள் காணப்படுவது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக நீர் நாய்கள் கூட்டமாகவே தென்படும். இந்த நீர்நாய் தனித்து காணப்படுவதால் கூட்டத்திலிருந்து வெள்ளத்தின் காரணமாக விலகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் அளவு கடந்த சில நாட்களில் 9,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் கொண்ட அணை தற்போது 113.05 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 5,200 கன அடியாக இருப்பதால், முன்னதாக 7,000 கன அடியில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கடலோர பகுதிகளில் வலுவடைந்து, தமிழக கடற்கரைக்கு அருகில் நகர்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலப்பரப்பிற்கு அருகில் வரும்போது அதின் பலத் தன்மை குறைந்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில், கடற்கரை பகுதிகளில் இன்று, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருப்பதாவது, திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+