'விட்டா கிறுக்கனாக்கிடுவாங்க'.. அபாய சங்கிலியை பிடித்து இழுத்த டிடிஆர்.. வைகை எக்ஸ்பிரஸ் கூத்து
விழுப்புரம் : வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்ட அன்ரிசர்வ்டு பெட்டி பயணிகள் இறங்க மறுத்துவிட்டனர். இதனால் பயணிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலையே நடுவழியில் நிறுத்தினார்.
சென்னையில் இருந்து தினமும் மதுரைக்கு மதிய வேளையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்புகிறது. இந்த ரயில் முழுக்க முழுக்க உட்காரும் வசதி கொண்ட ரயில் ஆகும். படுக்கை வசதி இல்லை.

இந்த ரயிலில் ஏழை மக்கள் பலர் சென்னையில் இருந்து மதுரை உள்பட தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். வெறும் 8 மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த ரயில் மதுரை போய்விடும் என்பதால், இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 50 வருடங்களை தாண்டி இயங்கும் இந்த வைகை எக்ஸ்பிரஸ் மதுரை மக்களின் அடையாளங்களில் ஒன்று.
இந்த ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் இடம் இல்லை என்றாலும், அன்ரிசர்வ்டு பெட்டி பயணிகளும் ஏறிக்கொள்வார்கள். ஆனால் முன்பதிவு செய்த பயணிகள் வந்தால் எழுந்து கொள்வார்கள்.இப்படித்தான் இருந்து வருகிறது. அதேநேரம் முன்பதிவு செய்த பெட்டிகளில், சில சமயங்களில் பொது பெட்டி போல் கடுமையான கூட்டமும் ஏற்படுவது உண்டு.
இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு வழக்கம் போல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு மாலை 3.55 மணிக்கு வருவது வழக்கம் ஆகும். நேற்று வழக்கம்போல் சென்னையில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 3.55 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலைய 4-வது நடைமேடைக்கு வந்தது.
அப்போது விழுப்புரத்தில் இருந்து முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்த பயணிகள் பலர், முன்பதிவு செய்யும் பெட்டிகளில் ஏறி அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்துவிட்டார்கள். இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்த பயணிகள் கழிவறைக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு மிகவும் சிரமப்பட்டனர். உடனே அவர்கள், இதுபற்றி ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டு அவர்களை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
அதன்படி ரயில்வே டிக்கெட் பரிசோதகரும் அந்த பயணிகளிடம் சென்று முன்பதிவு செய்யாத பெட்டிக்கு செல்லுமாறு வலியுறுத்தினார். ஆனால் அந்த பயணிகள் செல்ல மறுத்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் முன்பதிவு செய்து பயணச்சீட்டு எடுத்துள்ள பயணிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தார்கள்
இதனிடையே அந்த ரயில், மாலை 4 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டது. உடனே டிக்கெட் பரிசோதகர், திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் அந்த ரயில் நடைமேடையிலேயே நின்றுவிட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பிறகு பிரச்சினைக்குரிய பயணிகளை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு அனுப்பி வைத்தார்கள். அதனை தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றது. டிக்கெட் பரிசோதகரே அபாயசங்கிலியை பிடித்து இழுத்த சம்பவத்தினால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications