விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் திராவிட மாடலா? ஜெகத்ரட்சகனுக்கு எதிராக முளைத்த போஸ்டர்கள்! விசிக நிர்வாகி தற்காலிக நீக்கம்!

Google Oneindia Tamil News

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பஞ்சமி நிலத்தை அபகரித்ததாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த போஸ்டர்களை ஒட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    ஜெகத்ரட்சகனுக்கு எதிராக முளைத்த போஸ்டர்கள்! விசிக நிர்வாகி தற்காலிக நீக்கம்!

    திமுக மூத்த நிர்வாகியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கீழ்எடையாளம் என்ற இடத்தில் புதிதாக கல்லூரி ஒன்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    கல்லூரியின் கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகளுக்காக அதன் அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் பட்டியலில் சமூக மக்களிடம் இருந்து அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை வாங்கியதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    ராஜ்யசபா சீட் தரலைன்னா திமுகவின் ஜெகத்ரட்சகன் வாரிசுக்கு ஓட்டு- ரங்கசாமியை மிரட்டி சாதித்த பா.ஜ.க! ராஜ்யசபா சீட் தரலைன்னா திமுகவின் ஜெகத்ரட்சகன் வாரிசுக்கு ஓட்டு- ரங்கசாமியை மிரட்டி சாதித்த பா.ஜ.க!

    ஜெகத்ரட்சகன் எம்பி

    ஜெகத்ரட்சகன் எம்பி

    கடந்த சில வாரங்களாகவே இந்த விவகாரம் விழுப்புரம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலம் சட்டமன்ற தொகுதி செயலாளரான செல்வ சீமான் மற்றும் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து கல்லூரி கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுகவின் அடிப்படையில் வாக்குவாதம் முற்றியது.

    விசிக நிர்வாகி

    விசிக நிர்வாகி

    மோதல் ஏற்படும் ஊழல் உருவானதால் அங்கு வந்த மயிலும் காவல் நிலைய போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும், அப்பகுதி மக்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீசிக்க நிர்வாகியான செல்வ சீமான் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவை மிக கடுமையாக விமர்சித்து போஸ்டர் ஒட்டி இருக்கிறார்.

    போஸ்டர்களால் சர்ச்சை

    போஸ்டர்களால் சர்ச்சை

    அந்த போஸ்டர்களில்," தமிழக அரசே ஸ்டாலின் அரசை பஞ்சம் நிலத்தை அபகரிப்பது தான் திராவிட மாடலா? திண்டிவனம் வட்டம் கீழ்எடையாளம் தலித் மக்களின் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய் பஞ்சமி நிலத்தை மீட்க தலித் மக்களை ஒன்றிணைவோம் இவன் கீழ் எடையாலம் பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மயிலம் சட்டமன்ற தொகுதி விழுப்புரம் மாவட்டம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

     திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் புகைப்படங்களுடன் இடம் பெற்றிருந்த இந்த போஸ்டரால் திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் போஸ்டர்களை ஒட்டிய மயிலம் சட்டமன்ற தொகுதி செயலாளரான செல்வ சீமான் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

    நிர்வாகி இடைநீக்கம்

    நிர்வாகி இடைநீக்கம்

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கட்சித் தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தோழமை நட்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களின் உத்தரவுபடி செல்வ சீமான் மூன்று மாதத்திற்கு கட்சியில் உள்ள பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது" இந்த விவகாரம் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

    English summary
    Posters against DMK Member of Parliament Jagathratchagan caused a stir , VCK executive has been suspended from the party for pasting those poster; திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பஞ்சமி நிலத்தை அபகரித்ததாக போஸ்டர்களை ஒட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X