பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை, ஒன்றே குலம், ஒருவனே தேவன்- விஜய் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை வெளியிட்டிருக்கிறார். இதில் தங்களது கொள்கை வழிக்காட்டியாக உள்ளவர்களையும் அறிவித்திருக்கிறார். அதில் முதன்மை வழிக்காட்டியாக பெரியாரை குறிப்பிட்டுள்ளார். ஆனால், தவெக கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசியல் மற்ற மாநிலங்களின் அரசியலை விட மிகவும் வித்தியாசமானது. குறிப்பாக திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களுக்கு தமிழ்நாடு மிகுந்த வரவேற்பு அளித்திருக்கிறது. அந்த வகையில், புதியதாக விஜய் தனது அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இவரது முயற்சிக்கு விக்கிரவாண்டியில் தமிழக இளைஞர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அவரது கொள்கைகள் என்ன என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

ரஜினி கட்சி தொடங்கப்போவதாக சொன்னவுடன், கொள்கைகள் என்னவென்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திப்போச்சு என்று ரஜினி கூறியிருந்தார். எனவே தற்போதைய நடிகர்களின் அரசியல் புரிதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேள்வி விஜய் விஷயத்திலும் கேள்வி எழுந்தது. ஆனால், தனது கொள்கை என்ன? வழிக்காட்டி யார்? ஏன் அவர்களை வழிக்காட்டியாக ஏற்கிறோம் என்று விஜய் தெளிவாக கூறியுள்ளார்.

ஆனால் அவர் பேசிய விஷயங்களில் சில விவாதமாகியுள்ளது. அதாவது, தனது கொள்கை வழிக்காட்டியாக பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், காமராஜர் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரை ஏற்பதாக அறிவித்துள்ளார். இதில் பெரியார் குறித்து அவர் கூறியதுதான் பஞ்சாயத்தாகியுள்ளது.

அதாவது "பெரியாரின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர் கூறிய கடவுள் மறுப்பு கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல" என்று கூறியுள்ளார். பெரியரை இத்தனை காலமும் உயர்த்தி பிடிப்பதற்கு காரணம் கடவுள் மறுப்பு கொள்கைதான். சாதி மற்றும் மதம் என இரண்டுதான் பிரிவினைவாதத்திற்கு எதிரானதாக இருக்கிறது. ஆனால், விஜய் இதை மட்டும் தவிர்த்துவிட்டு விஜய், பெரியாரை தனது கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+