விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திடீரென பாமகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. காரணத்தை பாருங்க!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 11 சுற்றுகள் முடிவில் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். இதனை திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், விக்கிரவாண்டி வாக்கு எண்ணும் மையத்தில் பாமகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். பணம், பொருள் கொடுக்காமல் அதிக வாக்குகள் பெற்றிருப்பதாக பாமகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக சார்பாக அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள பாமக அன்புமணியை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார்.

அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்தது. தேமுதிகவும் இந்த தேர்தலை புறக்கணித்தது. இதன் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக - பாமக - நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவியது. இன்று இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்று வருகிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணி 8 சுற்றுகளின் முடிவில் 19,812 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தார். தொடர்ந்து 11 சுற்றுகள் முடிவில் பாமக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இதனால், விக்கிரவாண்டியில் பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேபோல அண்ணா அறிவாலயத்திலும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலினும் அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார்.
இது ஒருபக்கம் இருக்க இரண்டாவது இடத்தில் உள்ள பாமகவினரும் விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணும் மையம் அருகே பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாக்குக்கு பணம், பொருள் கொடுக்காமல் அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் பட்டாசு வெடித்து கொண்டாடுவதாக பாமகவினர் கூறினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications