அடுத்தடுத்து ரவுண்டு கட்டும் அவதூறு வழக்குகள்.. சி.வி.சண்முகம் போட்ட மனு.. நீதிபதி அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி அதிமுக சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் கடுமையாக விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

CV Shanmugam AIADMK mk stalin

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்.பியுமான சி.வி. சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டது. அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சி.வி.சண்முகத்திற்கு எதிராக அவதூறு வழக்கு விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா, சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். அவதூறு வழக்கில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சி.வி.சண்முகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

திண்டிவனம் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் எனவும், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை எனக் கூறினார் உயர்நீதிமன்ற நீதிபதி.

அதேசமயம், மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+