லஞ்சமா கேட்குறீங்க.. கட்டிட தொழிலாளி செய்த காரியம்.. விழுப்புரம் அதிகாரியின் தூக்கம் போச்சு
விழுப்புரம்: தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த கட்டுமான தொழிலாளியிடம், ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட விழுப்புரம் நகராட்சி அலுவலர் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார். கட்டுமான தொழிலாளி வீட்டிற்கே போய் லஞ்சம் வாங்க சென்ற அதிகாரிக்க்கு அங்கு போன பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் முழு விவரங்களை பார்க்கலாம்.
அரசு சேவைகளை பெற மக்கள் அதிகாரிகளை அணுகும்போது, லஞ்சம் கேட்பது பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி நடவடிக்கை எடுத்து கையும் களவுமாக பிடிக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது சஸ்பெண்டு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசு ஒருபக்கம் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் கூட மற்றொரு பக்கம் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இறப்பு சான்றிதழுக்கு 10 ஆயிரம் லஞ்சம்
அப்படியான ஒரு நிகழ்வுதான் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- விழுப்புரம் காகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் காத்தமுத்து (வயது 58), கட்டிட தொழிலாளியான இவருடைய தந்தை அபிமன்னன். கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இவர் இறந்துவிட்டார். அவரது இறப்பு சான்றிதழை மகன் காத்தமுத்து உடனடியாக வாங்கவில்லை. இந்த நிலையில், தற்போது இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் காத்தமுத்து விண்ணப்பித்தார்.
இதற்காக காத்தமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகம் சென்று அங்கு துப்புரவு ஆய்வாளராகவும், இறப்பு பதிவை பதிவு செய்யும் அலுவலராகவும் பணியாற்றி வரும் மதன்குமார் (41) என்பவரை அணுகினார். அதற்கு அவர், அபிமன்னன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழை இதுவரை வழங்கவில்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தரும்படி காத்தமுத்துவிடம் கேட்டு இருக்கிறார்.
தூக்கத்தை இழந்த அதிகாரி
இதனால் அதிர்ச்சியடைந்த காத்தமுத்து, லஞ்சம் கேட்ட நகராட்சி அலுவலர் மதன்குமாருக்கு தக்க பாடம் புகட்டினார். இதன்படி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை காத்தமுத்துவிடம் கொடுத்து அதை அந்த அதிகாரி மதன்குமாரிடம் கொடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை காத்தமுத்து, மதன்குமாரை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டிற்கு வர சொன்னார்.
காத்தமுத்து வீட்டுக்கு வந்த மதன்குமாரிடம் லஞ்ச பணத்தை வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 10 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்திற்கு ஆசைப்பட்ட அதிகாரி மதன்குமார் தற்போது, நிம்மதி இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டில் மற்றொரு சம்பவம்
இதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டா வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்கிய விஏஓ நேற்று சிக்கினார். நத்தம் புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை சார்பில் கடந்த ஒரு சில மாதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியுடைய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், மானாம்பதி அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்த தேன்மொழி (வயது 40) என்பவரும் பட்டா பெற தகுதியான நபராக தேர்வு செய்யப்பட்டார்.
ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்த தேன்மொழி
இதையடுத்து தேன்மொழி அருங்குன்றம் விஏஓவான காஞ்சிபுரத்தை சேர்ந்த சக்குபாய் (வயது 53) என்பவரை அணுகினார். இந்த விஏஓ, பட்டா வழங்க வேண்டும் எனில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்தார்.
தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் தாளை தேன்மொழி, விஏஓவிடம் கொடுத்தார். விஏஓ தனது உதவியாளறிடம் கொடுக்க சொன்னதாக தெரிகிறது. அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ சக்குபாய் மற்றும் மானாம்பதியை சேர்ந்த கிராம உதவியாளர் சரவணன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications