"கூப்பிடுறியா, கூப்பிடு".. பெண் ஆபீசரிடம் எல்லைமீறல்.. வெளியானது வீடியோ.. சிக்கிய விசிக நிர்வாகி
: பெண் அதிகாரியை மிரட்டிய விழுப்புரம் விசிக நிர்வாகி மீது புகார் தரப்பட்டுள்ளது
விழுப்புரம்: பெண் அதிகாரியை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார் விசிக நிர்வாகி ஒருவர்.. இது வீடியோவாகவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் அன்புதேவ குமாரி.. அதபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர் சேரன்.
இவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தாட்கோ அலுவகத்திற்கு சென்றுள்ளார்.. ஆனால், ஆதரவாளர்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

சேரன் ஆத்திரம்
நிராகரிக்கப்பட்ட தன்னுடைய மனுவை ஏற்ககோரி கேட்டுள்ளார்... இதற்கு அன்புதேவ குமாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வெடித்தது.. இதனால் அவர்களை வெளியே போகும்படி சொல்கிறார் அன்புதேவகுமாரி.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சேரன், பெண் அதிகாரியை தகாத வார்த்தையால் பேச ஆரம்பித்தார்.. அத்துடன் மிரட்டலும் விடுத்துள்ளார்.. சேரனுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்களும் பெண் அதிகாரியை மிரட்டி உள்ளனர்.

கூப்பிடு பார்க்கலாம்
இது வீடியோவாக வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், "நாங்க ஏன் வெளியே போணும்? இது என்ன உங்க அப்பன் வீடு ஆபீசா? நாங்க ஏன் வெளிய போகணும்? யாரை பார்த்து என்ன சொல்றே? நான் யார் தெரியுமா? கூப்பிடறியா? யாரை கூப்பிடறியோ கூப்பிடு.. நீ முதலில் வெளியே வா.. நீ எப்படி எங்களை பேசலாம்? " என்று சொல்லி மறுபடியும் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.. இந்த வீடியோ பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

திமுக கூட்டணி
இதுக்குறித்து மேற்கு காவல் நிலையத்தில், தாட்கோ பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.. திமுக ஆட்சியில் திமுக வினரால் மட்டுமின்றி கூட்டணி கட்சியினராலும் தொல்லையா? அதுவும் அரசு துறை அதிகாரிகளுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னாகும்? என்ற அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் இணையவாசிகள்.

ஆபாச பேச்சு
நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்க சொல்லி மிரட்டல் விடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவதாக அந்த அதிகாரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.. அரசு பெண் அதிகாரியை தகாத வாரத்தையில் பேசியதும், என்ன செய்வது என்று தெரியாமல், விசிக பிரமுகர் திடீரென செல்போனை எடுத்து மேஜை மீதுள்ள புத்தகம் மீது வேகமாக வீசுவதும், என அந்த வீடியோவை பார்ப்பதற்கே பகீரை கிளப்பி வருகிறது.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications