எல்லை தாண்டக் கூடாது.. தூக்கியடிக்கப்பட்ட செஞ்சி மஸ்தான்! ஏரியா பிரச்சினை.. தலைமைக்கு போன புகார்..!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுகவில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வசம் இருந்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீதான எல்லை தாண்டிய புகார்களே பதவி பறிப்புக்கு காரணம் என்கின்றனர் திமுகவினர்

விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

vikravandi assembly by election 2024 Gingee Masthan ponmudi dmk mk stalin

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

முன்னதாக அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம சிகாமணியின் பெயர் வேட்பாளர் பட்டியலில் அடிபட்ட நிலையில் இறுதியில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் கட்சியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. புகழேந்தி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து நிலையில் அவரது மறைவு காரணமாக மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகனான கௌத சிகாமணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் .

அதே நேரத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பொறுப்பாளராக பா.சேகர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரம் விழுப்புரம் மட்டுமல்லாது தமிழக அளவில் பேசு பொருளாக மாறி இருக்கும் நிலையில் பதவி பறிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விழுப்புர மாவட்ட திமுகவினரிடம் பேசினோம். அப்போது அமைச்சருக்கு எதிரான புகார்களும் எல்லை தாண்டிய விவகாரங்களும் தான் மாற்றத்திற்கு காரணம் என்கின்றனர்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பல ஆண்டு காலம் கொடி கட்டி பறந்த பொன்முடி கட்சி இறுதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். 2020ஆம் ஆண்டு அவர் திமுக துணை பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து மாவட்ட பொறுப்புக்கு அவரது புகழேந்தி எம்எல்ஏ வந்தார். 2022ஆம் ஆண்டு தெற்கு வடக்கு என மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

வடக்கு மாவட்ட செயலாளராக செஞ்சி மஸ்தான் தெற்கு மாவட்ட செயலாளராக புகழேந்தியும் நியமிக்கப்பட்டனர். அப்போதிருந்து பொன்முடி தரப்புக்கும் செஞ்சி மஸ்தான் தரப்புக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. புகழேந்தி மறைவை அடுத்து புதிய மாவட்ட செயலாளர் யார்? வேட்பாளர் யார்? என்ற கேள்விகள் எழத் தொடங்கியது. இந்த நிலையில் கௌதம சிகாமணியை மாவட்ட செயலாளராகவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிற்கவைக்கவும் பொன்முடி முயற்சிகள் மேற்கொண்டார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு காரணமாக தனது எம்எல்ஏ பதவியையும் அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்தார். இதை அடுத்து சில நாட்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். அப்போது பொன்முடியின் தெற்கு மாவட்டத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளில் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது அவர் தரப்பை ஆத்திரத்தில் ஆழ்த்தியது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செஞ்சி மஸ்தான் பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் பொன்முடி மைக்கை பிடுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மகனுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை பெற்றுக் கொடுத்திருக்கும் பொன்முடி வேட்பாளர் தேர்வில் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் செஞ்சி மஸ்தான் நீக்கம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் செஞ்சி மஸ்தானின் எல்லை தாண்டிய நடவடிக்கைகளும் அது தொடர்பாக தலைமைக்குப் போன புகார்களுமே காரணம் எனக் கூறப்படுகிறது. பொன்முடி தரப்பினர் எல்லை தாண்டி நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருந்தாலும் வேறு சிலர் இது தொடர்பாக தலைமைக்கு புகார் அனுப்பியதும் தேர்தலை கருத்தில் கொண்டும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர் விழுப்புரம் மாவட்ட திமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+